டாக்ஸிக் பட விழாவில் தமிழில் பேசி அசத்திய நடிகர் யாஷ் – வைரலாகும் வீடியோ
Actor Yash | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் தமிழ் புரமோஷன் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து கன்னட மொழியில் படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில டுத்தடுத்து இந்தி மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கன்னட மொழியில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தினை இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கி உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர் யாஷ் திரைக்கதையை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நாளை 26-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன்படி டாக்ஸிக் படக்குழு நேற்று சென்னையில் தங்களது படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டு பேசினர். அதிலும் குறிப்பாக நடிகர் யாஷ் தமிழில் ரசிகர்களுடன் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈத்து வருகின்றது.




டாக்ஸிக் பட விழாவில் தமிழில் பேசி அசத்திய நடிகர் யாஷ்:
அதன்படி அந்த விழாவில் நடிகர் யாஷ் பேசியதாவது, வணக்கம். இந்த காதலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் ரத்தத்தில் ரத்தமான, அப்டி சொல்லலாம் னு நெனைச்சா எம்ஜிஆர் சொல்லிட்டாரு. என்னா வாழவைத்தா தெய்வங்களே, அப்டி சொல்லலாம்னா தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிட்டாரு. என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி சிஎம் விஜய் சொல்லிட்டாரு. என்னைத் தத்தெடுத்த தமிழ் மக்களேனு சொல்ல முடிமா என்று நடிகர் யாஷ் தமிழில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி படத்தை பார்த்து இருக்கீங்களா? எந்த ஓடிடியில் பார்க்கலாம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Yaah‘s Tamil fluency 🔥:
“Vanakkam. I don’t know what to say for this love.
En Rathathil Rathamana, Apdi sollalamn nu nenaicha ~ #MGR sollitaruEnna Vazhavaitha Deivangale, Apdi sollalam na ~ Thalaivar #Rajinkanth sir sollitaru
En Nenjil Kudi irukum ~ #ThalapathyVijay CM sir… pic.twitter.com/sFEA2hOg0R
— AmuthaBharathi (@CinemaWithAB) August 24, 2026