AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே… 9 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் விவேகம் படம்!

9 Years Of Vivegam Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நட்டிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான விவேகம் படம் தற்போது 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே… 9 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் விவேகம் படம்!
விவேகம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2026 14:37 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விவேகம். நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்தாலும் வசூலில் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சிறுத்தை சிவா எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாண்டியில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன், கருணாகரன், அமிலா டெர்சிமெஹிச், செர்ஜ் க்ரோசன்-காசின், ஆரவ் சவுத்ரி, சுவாமிநாதன், சரத் ​​சக்சேனா, பரத் ரெட்டி, பில்லி முரளி, பிராங்கா புஜிக் அங்க கசேசா, போஜானா ஆர்டினாசெவ், வோஜிஸ்லாவ் டாமிக், கட்டரினா கோஜ்கோவிச், மிலோஸ் டிமோடிஜெவிக், ராடோமிர் பெட்கோவிக், பஷர் ரஹால், ஸ்லோபோடன் ஸ்டெபனோவிக், ஜோகிம் டாசிக், ஹிவ்ஸோ நெசிரோவிக், ஸ்லாவிசா இவனோவிக்,
அலெக்சாண்டர் விண்டர்ஸ் மற்றும் மிலன் ஜோவனோவிக் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

9 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் விவேகம் படம்:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவனா இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பல ட்ரோல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் முன்னாள் சிடிஎஸ் அதிகாரியான அஜித் குமார் செர்பியாவில் நடைபெற இருந்த சட்டவிரோதமன ஆயுத பரிவர்தனையை தடுத்து அது தொடர்பான தகவல்கள் நிறைந்த டேட்டாவுடன் அடர்ந்த காடுகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அந்த பயணத்தில் என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Arjun Das: வெட்டு.. குத்து.. ரத்தம் இல்லாத படம்.. ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசிய அர்ஜுன்தாஸ்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… படத்தில மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் யாஷ் அப்படிதான் – நடிகை நயன்தாரா சொன்ன விசயம்

Follow Us