AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படத்தில மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் யாஷ் அப்படிதான் – நடிகை நயன்தாரா சொன்ன விசயம்

Nayanthara talks about Actor Yash | தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் யாஷ் எப்படிப்பட்டவர் என்று பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

படத்தில மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் யாஷ் அப்படிதான் – நடிகை நயன்தாரா சொன்ன விசயம்
நயன்தாரா மற்றும் யாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2026 18:11 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி அதிக அளவில் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீப காலத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நாயகியை மையமாக வைத்து உருவான படங்களாகவே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நாயகன்களுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கி உள்ளார் நடிகை நயன்தாரா. அதன்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இறுதியாக படம் ஒன்றில் நடித்து வெளியாகி இருந்தது. மன சங்கர வர பிரசாத் காரு என்ற அந்தப் படம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடிகர் கவினுக்கு ஜோடியாக தற்போது ஹாய் படத்திலும், நடிகர் யாஷிற்கு ஜோடியாக டாக்ஸிக் என்ற படத்திலும் நடித்து உள்ளார். இதில் டாக்ஸிக் படத்தில் பல நாயகிகளுன் ஒருவராக நடித்து உள்ளார். மேலும் ஹாய் படத்தினை தயாரித்து நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஹாய் படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா நடிகர் யாஷ் குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

படத்தில மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் யாஷ் அப்படிதான்:

நடிகர் யாஷ் எப்படி படத்தில் ராக்கி பாயா இருப்பாரோ, அதே மாதிரி தான் அவர் நிஜவாழ்க்கையிலும். அவர் ஒர்க் எப்படி பண்றாருனா அவரோட வேலைய பாது நாம எல்லாம் பயந்து போய்டுவோம், அந்த அளவுக்கு வேலை பன்றாரு. இவரு மாதிரி வேலை பண்ண இனிமேல் ஒருத்தர் பிறந்து தான் வரணும். அவரா பத்தி பேசணும்னா 2 மணி நேரம் கூட பேசலாம் என்று நடிகை நயன்தாரா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… Seyon: பாடல் ரெடி.. சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அப்டேட்டை வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டிக்கெட் முன்பதிவை தொடங்கிய டாக்ஸிக் படக்குழு – வைரலாகும் பதிவு!

Follow Us