நயன்தாராவின் அந்த படத்தின் டிக்கெட்டை அடிச்சி புடிச்சி வாங்கி பார்த்தேன் – கவின் ஓபன் டாக்!
Kavin Shares Fan Moment: தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் கவின். இவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள புது திரைப்படம்தான் ஹாய். சமீபத்தில் புரோமோஷன் நேர்கணலில் கலந்துகொண்ட கவின், நயன்தாராவின் திரைப்படத்தை நண்பர்களுடன் பார்க்க சென்றது குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில், பான் இந்திய மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையான இவரின் நடிப்பில், தமிழில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 வருடங்களை கடந்துள்ளது. இவரின் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி தயாராகியுள்ள திரைப்படம்தான் ஹாய் (Hi). இதை இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைக்க, பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், அதன் விளம்பர பணிகள் நடைபெற்றுவருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் தொடர்பாக நயன்தாரா மற்றும் கவின் (Kavin) ஒரு நேர்காணலில் கலந்துகொண்டனர். அதில், கல்லூரி காலங்களில் நயன்தாராவின் படங்களை நண்பர்களுடன் பார்க்க சென்ற தருணங்கள் பற்றி கவின் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: டிசி படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் வீடியோ
நயன்தாராவின் திரைப்படத்தை பார்க்கச்சென்றது குறித்து கவின் பேச்சு:
அந்த பேட்டியின்போது பேசிய கவின், அப்போது சீரியல்களை விடவும் நான் திரைப்படங்களை பார்ப்பதற்கே விரும்புவேன். அதிலும் நயன்தாராவின் யாரடி நீ மோகினி படத்தை பார்த்திருக்கிறேன். நான் திருச்சியில் ஜேக்கல்லூரியில் படிக்கும்போது, அந்த சமயத்தில் ஆன்லைன் டிக்கெட் எல்லாம் கிடையாது. அப்போது அடிச்சி புடிச்சி டிக்கெட் வாங்கி, யாரடி நீ மோகினி படத்தை பார்த்திருந்தேன். என்னுடன் எனது 23 நண்பர்களும் அந்த படத்தை பார்த்தோம்” என அந்த நேர்காணலில் கவின் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கி அட்லூரி
நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
மயிலேறும் முருகன் துணை 🙏🏼#Hi trailer 🙂
▶️ https://t.co/n3LD88cxwH#Nayanthara @VishnuEdavan1 @JenMartinmusic @ZeeStudios_ @zeestudiossouth @Rowdy_Pictures @7screenstudio @shuklarajesh248 @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/HMd9AwTS9c
— Kavin (@Kavin_m_0431) August 20, 2026
நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள ஹாய் படமானது வித்தியாசமான காதல் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாக்கியராஜும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பிரபு மற்றும் பூர்ணிமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பீல் குட் காதல் கதையில் உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.