AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Director Venky Atluri about Vishwanath and sons | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கி அட்லூரி
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2026 11:01 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்று வருகின்றது. முன்னதாக சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கருப்பு படத்தைப் போலவே இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தொடர்ந்து ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படத்தின் வசூல் தொடர்பான அப்டேட்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி அப்படி அமைய என்ன காரணம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் பட க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம்:

ஒவ்வொரு காட்சியையும் கருத்தில் கொண்டு நான் சுமார் ஆறு அல்லது ஏழு வரைவுத் திரைக்கதைகளை (drafts) எழுதியிருப்பேன். அதனால், படத்தின் கிளைமாக்ஸ் (முடிவு) வேறொரு விதமாக இருந்தது. வழக்கமாக நாயகனும் நாயகியும் கட்டிப்பிடித்துக்கொள்ளும் வகையிலான ஒரு மகிழ்ச்சியான முடிவைத்தான் நாங்கள் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, சூர்யா சார் உட்பட யாருமே அந்த முடிவை நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.

சூர்யா சார் ஒரு எளிய விஷயத்தைச் சுட்டிக்காட்டினார். நீங்கள் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்குப் பிறகு வருகிறீர்கள். நானோ முழுமையான கமர்ஷியல் படமான ‘கருப்பு’ படத்திலிருந்து வருகிறேன். எனவே, நாம் ஒரு குடும்பப் படத்தை உருவாக்கும்போது, ​​அதில் ஏதோ ஒரு புதுமை அல்லது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… அரசியல் வருகை குறித்து பேசிய சிலம்பரசன் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓணம் ஸ்பெஷலாக வெளியான கலிஃபா படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Follow Us