சொந்த ஊரில் காய்கறி வியாபாரியாக மாறிய நடிகர் விமல்
Actor Vimal Selling Vegetables | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் சமீபத்தில் தனது சொன்ந்த ஊரிற்கு சென்ற போது அங்கு காய்கறி கடை ஒன்றில் வியாபாரம் செய்தது தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் விமல் (Actor Vimal). இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்படி நாயகனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருத்தராகவும் வில்லன்களின் அடியால் கூட்டத்தில் ஒரு நபராகவும் என கூட்டத்தில் ஒரு நபராக அடையாளம் எதுவும் இல்லாமல் இருந்தது. இப்படியே சுமார் 8 வருடங்களாக தொடர்ந்து நடித்து வந்த நடிகர் விமலுக்கு கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் (Actor Prakash Raj) நாயகனாக நடித்த காஞ்சிவரம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் மூலமாக கதாப்பாத்திர நடிகராக மாறினார் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் (Director Pandiraj) இயக்கத்தில் வெளியான பசங்க படம் விமலின் சினிமா வாழ்க்கையை மாற்றியது என்பது நிதர்சனமான உண்மை.
இந்த பசங்க படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் விமல். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது. மேலும் படங்களில் மட்டும் இன்றி அவ்வபோது இணையதள தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விமல்.
Also Read… நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் – துருவ் விக்ரம் ஓபன் டாக்
சொந்த ஊரில் காய்கறி வியாபாரியாக மாறிய நடிகர் விமல்:
பொதுவாக நடிகர் விமல் பேட்டியோ அல்லது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டால் அது அதிக அளவில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் சமீப காலமாக நடிகர் விமல் அளித்து வரும் பேட்டிகளும் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விமல் திருச்சி மாவட்டத்தில் தனது சொந்த ஊரான பண்ணங்கொம்பில் உள்ள வாரச் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்துள்ளார். கூவி கூவி மக்களை அழைத்து நடிகர் விமர் காய்கறிகளை வியாபாரம் செய்யும் வீடியோ மற்றும் காய்கறி கடையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் என அவை அனைத்தும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… டிக்கெட் புக்கிங்கை தொடங்கியது பெத்தலேக குடும்ப யூனிட் படம்



