வாழ்க்கையில் எனது வழிகாட்டி… பிக் பாஸில் தனது குடும்பம் குறித்து எமோஷனலாக பேசிய முனியம்மாள் – ப்ரோமோ!
Bigg Boss Tamil 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வராம் முழுக்க பேமிலி வீக் என்ற நிலையில், போட்டியாளர்களின் குடும்பம் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். அதில் முனியம்மாளின் குடும்பம் இன்று (27/11/2026) வந்திருந்த நிலையில், தனது பேமிலி குறித்து முனியம்மாள் எமோஷனலாக பேசியது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay Tv) அதிக மக்களால் பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 12வது வாரத்தின் இறுதியை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக தனது வேலையை அவர் செய்துவருகிறார். இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், இன்றுடன் 82 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரம் தொடக்கத்தில் முதல் பேமிலி வீக்காக அமைந்த நிலையில், போட்டியாளர்கள் தங்களின் குடும்பங்களை சந்தித்து வருகிறார்கள்.
அந்த விதத்தில் கடந்த 3 நாட்களாக மற்ற போட்டியாளர்களின் குடும்பம் வந்த நிலையில், இன்று முனியம்மாள் (Muniyammal) மற்றும் ஜேசன் (Jason) இருவரின் குடும்பங்கள் வருகை தந்திருந்தனர். இதில் முனியம்மாள் தனது குடும்பம் குறித்து பிக் பாஸில் எமோஷனலாக பேசியுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இந்த உலகத்திலே அழகான பெண்.. ஜேசனை பார்க்க வந்த மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
பிக் பாஸில் தனது குடும்பம் குறித்து எமோஷனலாக பேசிய முனியம்மாள்:
இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டின் பிளாஸ்மா டிவியின் முன் நின்று முனியம்மாள் பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், “பலரின் குரலாக நான் இந்த வீட்டில் ஒலித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோசம். பெற்றோர்கள்தான் எப்போது குழந்தைகளின் வழிகாட்டியாக இருப்பார்கள். ஆனால் எனது வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாக இருந்தது எனது பையன்தான்.
இதையும் படிங்க: சூர்யா 49, 50 நம்பர் கேம்-ல் மாட்ட எனக்கு விருப்பமில்லை.. சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கணவர்களின் மத்தியில், எனது சீன் அப்பா (எனது கணவர்) எனக்கு நிறைய சுகந்திரத்தை கொடுத்திருக்கிறார். மேலும் நமக்கு கிடைக்குமா? என பின் நின்று ஏங்கி பார்ப்பதை விட.. நமக்கு கிடைக்கும் என எண்ணி ஒரு எட்டு முன் வந்து கையை நீட்டிவிடலாம்” என்பது எனது கருத்துக்கள் என அதில் அவர் எமோஷனலாகவும், உறுதியாகவும் பேசியிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 82வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day82 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/LQHFENBWdO
— Vijay Television (@vijaytelevision) November 27, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றுடன் (27/11/2026) பேமிலி வீக் நிறைவடைகிறது. மேலும் நாளை முதல் வழக்கம்போல பிக் பாஸில் மற்றவைகள் நடக்கும். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாளை போட்டியாளர்களை சந்திக்கும் நிலையில், இந்த வாரத்தில் நடந்தவைகள் குறித்து விவரிப்பார். மேலும் இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என வட்டாரங்கள் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.