AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் கிடந்த 12 வயது சிறுமியின் உடல்!”.. கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை!

12-Year-Old Girl's Body Found in Yercaud Gorge: சேலம் ஏற்காடு அடுத்த குப்பனூர் மலைப்பாதை வழுக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் கிடந்த 12 வயது சிறுமியின் உடல்!”.. கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை!
ஏற்காடு
Sathis S
Sathis S | Published: 27 Nov 2026 15:42 PM IST

சேலம், நவ.27: சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த குப்பனூர் மலைப்பாதையில் வழுக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில், சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கிடப்பதை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பள்ளத்தில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் மரணத்திற்கான பின்னணி குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: அரசியல் அழுத்தம் காரணமா? அன்பில் மகேஷ் வழக்கு விசாரணையிருந்து நீதிபதி திடீர் விலகல்.. என்ன காரணம்!

தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை:

இந்தச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உயிரிழந்த சிறுமி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் அவர் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம், கொளத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் ஓமலூர் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான இந்த மூன்று தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சோதனைச் சாவடிகளில் கெடுபிடி:

சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடி மற்றும் குப்பனூர் சோதனைச் சாவடிகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வழியாக வந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும், ஏற்காடு பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் தங்கிப் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் நேரில் சென்று, அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி முக்கிய விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் வழக்கு.. “உத்தரவை செயல்படுத்தினீர்களா?.. ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!”.. உச்சநீதிமன்றம் கேள்வி!

அடையாளம் காணப் புகைப்படம் வெளியீடு:

இறந்த சிறுமியின் அடையாளத்தை விரைந்து கண்டறியும் வகையில், சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்தப் புகைப்படம் அனுப்பப்பட்டு, காணாமல் போன சிறுமிகள் குறித்த புகார்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஏற்காடு காபி தோட்டங்களில் தங்கிப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளிலும் போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தனிப்படைகளின் விசாரணை முடிவுகள் வெளியான பிறகே இந்தச் சம்பவத்தின் முழுமையான உண்மை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us