இந்த உலகத்திலே அழகான பெண்.. ஜேசனை பார்க்க வந்த மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
Jasons Emotional Family Week: விஜய் டிவியில் வெளியாகிவரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த வீக் முழுவதும் பேமிலி வாரம் என்ற நிலையில், இறுதி போட்டியாளரான ஜேசனை பார்க்க அவரின் மனைவி மற்றும் சகோதரன் வந்திருக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 82 நாட்களை கடந்த நிலையில், இன்னும் சில வாரங்களுக்குள் இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிவிடும். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே வாரமாக இருந்த நிலையில், இந்த வாரமானது முழுக்க பேமிலி வீக்காக (Family Week) அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக போட்டியாளர்களின் வீட்டிலிருந்து குடும்பங்கள் வந்து சந்தித்திருந்தார்.
குறிப்பாக டிடிஃஎப் வாசன் மற்றும் அன்சர் குடும்பம் தொடர்பான ப்ரோமோக்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இறுதியாக ஜேசனின் குடும்பம் வந்துள்ளது. அவரின் மனைவி மற்றும் சகோதரன் வரும் ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஒரே கொஞ்சல்ஸ் தான்.. பிக் பாஸில் முனியம்மாளை பார்க்கவந்த குடும்பம் – ப்ரோமோ இதோ!




பிக் பாஸ் வீட்டிற்குள் மனைவியை சந்தித்த சந்தோஷத்தில் ஜேசன்:
இந்த ப்ரோமோவில் ஜேசன், வீட்டின் வாசலை பார்த்தவாறே, தனது குடும்பத்திலிருந்து யார் வருவார் என காத்திருக்கும்படியாக காட்டப்பட்டுள்ளது. மேலும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்ட நிலையில், அவர் மகிழ்ச்சியில் பூரிக்கும்படியாக இருந்தார். தனது குடும்பத்திலிருந்து யார் வருவார் என எண்ணி அவர் இருக்கும்படியாக இந்த ப்ரோமோவில் உள்ளது. மேலும் ஜேசனின் மனைவி மற்றும் அவரின் சகோதரன் இருவரும் இந்த வீட்டிற்குள் வந்த நிலையில், மனைவியை பார்த்த சந்தோஷத்தில் ஜேசன் தள்ளிப்போனார்.
இதையும் படிங்க: பேக் டூ பேக் 3 கெட்டப்.. இந்திய சினிமாவில் நடிகை சாய் பல்லவி புரியும் சாதனை!
உடனே வந்து மனைவி கட்டியணைத்திருந்தார். மேலும் ப்ரோமோவின் இறுதியில் பேசிய ஜேசன், இவர் உலகத்திலே மிகவும் அழகான பெண் என அதில் கூறியிருந்தார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி, ஜேசனுக்கும் ரோமேன்ஸ் பண்ண தெரியுமா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 82வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த வீடியோ:
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க பேமிலி வாரம் என்ற நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அவர் அவர் குடும்பங்களை சந்தித்துள்ளனர். மொத்தமே 8 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வீட்டில் மீதம் இருக்கும் நிலையில், இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த வாரத்தில், பழைய போட்டியாளர்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கும் நுழைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.