AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே கொஞ்சல்ஸ் தான்.. பிக் பாஸில் முனியம்மாளை பார்க்கவந்த குடும்பம் – ப்ரோமோ இதோ!

Bigg Boss Tamil 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க பேமிலி வாரம் என்ற நிலையில், இன்று (27/11/2026) முனியம்மாளை அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் பார்க்கவந்தது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒரே கொஞ்சல்ஸ் தான்.. பிக் பாஸில் முனியம்மாளை பார்க்கவந்த குடும்பம் – ப்ரோமோ இதோ!
பிக் பாஸ் முனியம்மாள் குடும்ப வருகைImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2026 10:37 AM IST

சின்னத்திரையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இருந்து தொகுத்துவரும் நிலையில், 12வது வாரத்தின் முடிவில் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்திற்கு சென்றுவிடும். அந்த விதத்தில் இந்த வாரம் முழுக்க பேமிலி வீக்காக அமைந்துள்ளது. இந்த வீட்டில் தற்போது மொத்தமாக 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர் அவர்களின் குடும்பங்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இறுதியாக முனியம்மாள் (Muniyammal) மற்றும் ஜேசன் (Jason) என இருவரின் குடும்பத்திலிருந்து யாரும் வரவே இல்லை என நினைத்த நிலையில், இன்று (27/11/2026) முனியம்மாள் குடும்பம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அவரின் கணவர் மற்றும் மகன், மகள்கள் எல்லாருமே வந்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

பிக் பாஸில் முனியம்மாளை காண வந்த குடும்பம்:

இந்த ப்ரோமோவில், முனியம்மாள் வீட்டில் தயாராகிக்கொண்டு இருக்கும்போது, திடீரென சர்ப்ரைஸாக அவரின் குடும்பம் வந்துள்ளது. முனியம்மாள் மகன், மகள்கள் மற்றும் கணவர் என மொத்தம் 4 பேர் அவரை பார்ப்பதற்கு வந்திருந்தனர். வந்த முனியம்மாள் மற்றும் அவரின் கணவரின் கொஞ்சல் குறித்த இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்ன தூக்கி வெச்சதே இல்லல நீ.. டிடிஃஎப் வாசனிடம் பொஸசிவ்-ஆன அவரின் மனைவி – ப்ரோமோ!

அதன் பிறகு தனது கணவருடன் நின்று பேசிய முனியம்மாள், “இதே மாதிரி ஊருக்குள்ளே ஜோடி போட்டு போனோம் என்றால், சீமா மாதிரியே என் பொண்ணுக்கு மாப்ல கிடைக்கணும்-னு சொன்னவர்கள் பலபேரு” என கூறினார். அதன் பிறகு பேசிய முனியம்மாளின் கணவர், என்னைக்கும் நான் இவளை லவ் பண்ணுறேன் என்றால், கல்யாணத்துக்கு பிறகு விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 82வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:


தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், மொத்தமாக 8 போட்டியாளர்கள் மீதம் இருக்கிறார்கள். 3 பெண் போட்டியாளர்கள் மற்றும் 5 ஆண் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் தற்போது இருகிறார்கள். அந்த விதத்தில் இந்த வாரத்திலும் இரட்டை எவிக்ஷன் இருக்கும் என்ற நிலையில், யார் யார் வெளியேறுகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us