நேபாள காற்றாட்டு வெள்ளம்.. காணாமல் போன 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அறிவிக்க முடிவு!
Nepal floods : நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கு நேபாள அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளம்- சீனா எல்லையில் அமைந்துள்ள உயரமான போதேகோஷி ஆறு ஒன்று கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி திடீரென பனி சரிந்து விழுந்ததில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1400- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீடுகள், கடைகள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. இதில், 5500 பேருக்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், தற்போது வரை அவர்களை மீட்க முடியவில்லை. இதன் காரணமாக, நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் விவரங்களை சரிபார்த்து, அவர்களை இறந்தவர்களாக அறிவிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ராம் பகதூர் கே.சி. தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்க முடிவு
623 வெளிநாட்டினர் உள்பட காணாமல் போனவர்கள் சுமார் 4000 பேரின் பெயர்களை குறிப்பிட்டு அதிகாரிகள் பொது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். மேலும், முறையான அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான சரிபார்ப்புக்கு பிறகு அந்த பட்டியலில் கூடுதல் பெயர்கள் சேர்க்கப்படலாம் என்றும், சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த உடன் அரசு சார்பில் மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விவரம் வெளியிடப்பட உள்ளது.
மேலும் படிக்க:எல் நினோவின் கடும் தாக்கம்! இந்துகுஷ் இமயமலையில் பனிச்சரிவு- வெள்ளப்பெருக்கு.. வெளியான எச்சரிக்கை!
உயிரிழந்தவர்களை எதிர்பார்க்கும் காத்திருப்பு காலம் குறைப்பு
கடந்த மாதம் நேபாள அரசு சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேரிடர் பாதிக்கப்பட்டவர்கள் இறந்ததாக அறிவிப்பதற்கான காத்திருப்பு காலம் 12 ஆண்டுகளிலிருந்து 6 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளம் இமயமலை நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பேரழிவாக அமைந்திருந்தது. வாரக் கணக்கில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மலைபோல் குவிந்திருந்த சேறு மற்றும் இடிபாடுகளை சல்லடை போட்டு தேசிய மீட்பு பணிகளுக்கு பிறகும் காணாமல் போனவர்களில் சிலரே உயிருடன் மீட்கப்பட்டு இருந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ்
தற்போது வரை 112 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் இல்லாததால், பல்வேறு குடும்பங்கள் இழப்பீடு கோரவோ, சொத்துகளை மாற்றவோ அல்லது பிற சட்ட விவகாரங்களை தீர்த்துக் கொள்ளவும் முடியாமல் இருந்து வருகின்றனர். தற்போது வரை உடல்கள் மீட்கப்படாதவர்களுக்காக சில குடும்பங்கள் ஏற்கனவே அடையாளப் பூர்வமான தகன சடங்குகளை நடத்தி உள்ளன. சீனாவில் எல்லையின் தீபெத்திய பகுதியில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 519 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதில் 213 பேர் காணாமல் போய் உள்ளனர். உயிரிழந்தவர்களாக அறிவிக்கப்படும் நபர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரியாத் கோபுரம் மீது ஹூதிக்கள் திடீர் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் காயம்.. வெளியுறவுத்துறை கண்டனம்!