ரூ.3.70 லட்சத்துக்கு ஏலம் போன ஜார்ஜ் வாஷிங்டன் தலைமுடி.. அமெரிக்காவில் சுவாரஸ்யம்!
George Washington Hair Sells for Lakhs | அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி சுமார் 227 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த தலைமுடி பல வம்சங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் ரூ.3.70 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன், நவம்பர் 24 : அமெரிக்காவின் (America) முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் (George Washington) தலைமுடி சுமார் பல லட்சங்களுக்கு ஏலம் போயுள்ளது. சுமார் 227 ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமுடி ஏலம் விடப்பட்ட நிலையில், அது பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது, இந்த ஏலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.3.70 லட்சத்துக்கு ஏலம் போன ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி
1799 ஆம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் உயிரிழப்பதற்கு முன்னதாக அவருக்கு விருந்தளித்து உபசரித்த ஜான் கேட்ஸ்பி என்பவரிடம் தான் இந்த தலைமுடி இருந்துள்ளது. ஜான் கேட்ஸ்பி விர்ஜினியா மாகாணம், அலெக்ஸாண்ட்ரியா நகரில் வசித்து வந்துள்ளார். இவர் 1798 மற்றும் 1799 ஆம் ஆண்டுகளில் வாஷிங்டன் பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய டிரம்ப்.. அமெரிக்க மத்திய வங்கிக்கு கடும் விமர்சனம்!
நட்பின் அடையாளமாக கிடைத்த முடி
1790களின் ஜார்ஜ் வாஷிங்டன் உடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, ஜான் கேட்ஸ்பிக்கு அந்த தலைமுடி கிடைத்துள்ளது. அதன் பிறகு மூன்று தலைமுறையாக அந்த தலைமுடி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, தனது தாத்தா ஜான் கேட்ஸ்பி இந்த தலைமுடியை நினைவு பொருளாக பாதுகாப்பு வந்ததாகவும், வாஷிங்டனின் உருவப்படத்திற்கு கீழே பிரேம் செய்து மாட்டி வைத்திருந்ததாகவும் அவரது பேத்தி ஜுலியா டென் ஜக் மெக்பிளேர், 1928 ஆம் ஆண்டு அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : டாஸ் மூலம் தேர்வு செய்யப்பட்ட தலைவர்.. அமெரிக்க தேர்தலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
நண்பர்களின் தலைமுடியை பாதுகாக்கும் வழக்கம்
அதன் பிறகு கேட்ஸ்பியின் வாரிசுகளிடம் இருந்து ஜான் கே.லாட்டிமர் என்ற சேகரிப்பாளர் இந்த தலைமுடியை பெற்று பாதுகாத்து வந்துள்ளார். தற்போது ஏலத்தில் இதனை வாங்கிய புதிய உரிமையாளரின் பெயர் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் தலைமுடியை நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைக்கும் வழக்கம் உயர்குடி மக்கள் இடையே இருந்து வந்துள்ளது.
அந்த வகையில் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது சுமார் ரூ.3.70 லட்சத்துக்கு ஏலத்திற்கு சென்றுள்ளது.