விபத்தில் மூளைச் சாவு அடைந்த மருத்துவ மாணவர்.. 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்!
Cuddalore Medical Student Organ Donation | கடலூரை சேர்ந்த 19 வயது மருத்துவ மாணவர் ஒருவர் நெல்லையில் இருந்து பைக்கில் தனது சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளைச் சாவு அடைந்துள்ளார்.
புதுச்சேரி, நவம்பர் 24 : கடலூரில் (Cuddalore) சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த மருத்துவ மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேர் மறு வாழ்வு பெற்றுள்ளனர். இந்த நிலையில், சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த மருத்துவ மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த மருத்துவ மாணவர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. லாரி ஓட்டுநரான இவருக்கு தேவன் என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். அவர் நெல்லையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அவர் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று, தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி அருகே நெல்லித்தோப்பு என்ற பகுதியில் பைக்கில் சென்றுக்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க : சத்குருவின் ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ (Disappearing Faces) புகைப்படப் புத்தகம் குறித்து தமன்னா, விஷால் பரத்வாஜ் உரையாடல்!
மோட்டார் சைக்கில் மோதி விபத்து : படுகாயமடைந்த மாணவர்
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கின் மீது மோதி தேவன் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த நிலையில், அந்த பகுதியில் இருந்தவர்கள் தேவனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தேவன் சிகிச்சை பலன் அளிக்காமல் மூளைச் சாவு அடைந்துள்ளார்.
இதையும் படிங்க : கடலுக்கு அடியில் அதிவேக பயணம்.. பல கி.மீ. ஆழத்தில் பிரம்மாண்ட ரயில் நிலையம்.. மும்பை டு அகமதாபாத் இடையே பணிகள் தீவிரம்!
உடல் உறுப்பு தானம் : 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்
இந்த நிலையில் தான், தேவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன் வந்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், தேவனின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, தேவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அதன் மூலம் இரண்டு பேர் பார்வை பெற்றுள்ளனர்.