AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாக நினைத்து செயல்பட்ட தவெக அரசு! முதல்வர் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் தவறாக வழிநடத்துகிறார்களா? – அண்ணாமலை கடும் விமர்சனம்!

Annamalai On Tiruparankundram Issue: நீதிமன்றத் தீர்ப்புகளை ஓர் அரசு தனது விருப்பு, வெறுப்புகளுக்கு உட்படுத்தாமல் நேர்மையாகச் செயல்படுத்தும்போதுதான் நாட்டில் நீதியும் சமநிலையும் நிலவ முடியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாகக் கருதி, தமிழக வெற்றிக் கழக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாக நினைத்து செயல்பட்ட தவெக அரசு! முதல்வர் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் தவறாக வழிநடத்துகிறார்களா? – அண்ணாமலை கடும் விமர்சனம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Nov 2026 21:46 PM IST

நவம்பர் 24, 2026: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதாகத் தமிழக வெற்றிக் கழக அரசை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் விஜய்யை அவரைச் சுற்றியுள்ளவர்கள் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாநிலத்தின் முதல்வர் அரசியல் சாசனம் வழங்கும் உரிமையின் அடிப்படையில் ஆட்சி நடத்துபவர் என்றும், நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களாக விளங்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்!


நீதிமன்றத் தீர்ப்புகளை ஓர் அரசு தனது விருப்பு, வெறுப்புகளுக்கு உட்படுத்தாமல் நேர்மையாகச் செயல்படுத்தும்போதுதான் நாட்டில் நீதியும் சமநிலையும் நிலவ முடியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாகக் கருதி, தமிழக வெற்றிக் கழக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமாக இருக்கும் என்பதை ஒரு சாமானியனாகத் தன்னால் உணர முடிவதாகவும், ஆனால் ஆளும் அரசுக்கு அது புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யை தவறாக வழிநடத்துகிறார்களா?

மேலும், முதல்வர் விஜய்யைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதுடன், அவரைச் சுற்றி ஒரு மாயக்கோட்டையைக் கட்டியுள்ளதாகத் தெரிகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அந்தச் சூழலை முதல்வர் உடைக்காவிட்டால், அதனால் ஏற்படும் இழப்பு அவருக்குத்தான் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க: மரபு மற்றும் ஆகம விதிகளின்படியே தீபம் ஏற்றப்பட்டது! திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் விளக்கம்

அரசியல், அறியாமை அல்லது கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் என எந்தக் காரணத்தைக் கூறினாலும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம் என உறுதியேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, இன்று அழிக்க முடியாத வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டதாகவும் தனது பதிவில் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையும் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Follow Us