AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் 1.72 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! வெறிநாய்க்கடி நோய் இல்லாத மாநகரை உருவாக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை

இதுவரை மொத்தம் 1,72,436 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை நீக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் மூலம் வெறிநாய்க்கடி நோய் இல்லாத சென்னையை உருவாக்குவதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் 1.72 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! வெறிநாய்க்கடி நோய் இல்லாத மாநகரை உருவாக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Nov 2026 20:43 PM IST

நவம்பர் 24, 2026: சென்னையில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 436 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகளை நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தெருநாய்கள் பொதுமக்களைத் துரத்திக் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறு குழந்தைகள் மற்றும் தனியாகச் செல்லும் நபர்களைத் தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தித் தாக்கும் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. மேலும், வெறிநாய்க்கடி நோயான ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

இந்த நிலையில், சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..! பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்..

இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. அங்கு அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் மைக்ரோ சிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர், அந்த நாய்கள் பிடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்படுகின்றன.

இதற்காக 40 நாய் பிடிக்கும் வாகனங்களும், 164 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 200 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 41,546 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 6 மையங்களில் இலவச சிகிச்சை!

மேலும், நோயுற்ற நாய்களை மீட்பதற்காக 15 வாகனங்களும், நாய்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்துவதற்காக 3 வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில் இலவசமாகச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 1.72 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னை மாநகராட்சி விதிகளின்படி, இதுவரை 1,01,548 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 78,328 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெறிநாய்க்கடி நோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், ரேபிஸ் நோய் இல்லாத சென்னையை உருவாக்கவும் அனைத்து தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் சிறப்புத் திட்டம் கடந்த 2026 ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.. மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்..

இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 1,72,436 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை நீக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் மூலம் வெறிநாய்க்கடி நோய் இல்லாத சென்னையை உருவாக்குவதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

Follow Us