நிலவில் உருளைக்கிழங்கு விளைவிக்கலாம்.. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்!
Moon Potato Farming Success | நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நிலவில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாஷிங்டன், நவம்பர் 25 : இனி வரும் காலங்களில் பூமியில் (Earth) இருந்து ஆய்வு மேற்கொள்ள நிலவுக்கு (Moon) செல்லும் விஞ்ஞானிகள், அங்கேயே தங்களுக்கு தேவையான உருளைக்கிழங்கை பயிரிட்டு, அறுவடை செய்வதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் (American Scientists) கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில், நிலவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
18 மாதங்களாக நடைபெற்ற ஆராச்சியில் கிடைத்த முடிவு
அமெரிக்காவின் ஒரேகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நிலவின் மண்ணை ஒத்த செயற்கை மண்ணை பயன்படுத்தி சுமார் 18 மாதங்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கோர்வாலிஸ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் பிரத்யேக பசுமை குடில் ஆய்வகத்தில் தான் விஞ்ஞானிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : எல் நினோவின் கடும் தாக்கம்! இந்துகுஷ் இமயமலையில் பனிச்சரிவு- வெள்ளப்பெருக்கு.. வெளியான எச்சரிக்கை!
வெற்றியில் முடிந்த சோதனை
இந்த ஆய்வில் உரம் போடாமல் வெறும் நிலவின் மண்ணில் விதைக்கப்பட்ட உருளைக்கிழங்கு செடிகள் வளராமல் மண்ணிலேயே குன்றிப் போயின. இதுவே நிலவின் மண்ணுடன் 30 சதவீதம் மண்புழு உரத்தை கலந்து விஞ்ஞானிகள் பயிரிட்ட உருளைக்கிழங்குகள், பூமியில் வளர்வதை போலவே முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் நவம்பர் 19, 2026 அன்று என்பிகே மைக்ரோகிரேவிட்டி (NPJ Microgravity) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதர்கள் உண்ண மிகவும் பாதுகாப்பான உருளைகள்
நிலவில் சோதனை முயற்சியாக விளைய வைக்கப்பட்ட அந்த உருளைக் கிழங்குகள் பூமியில் விளைய வைக்கப்படும் உருளைக்கிழங்குகளை போல உண்ணுவதற்கு மிகவும் பாதுகாப்பானதாகவும், பூமியில் விளைய வைக்கப்படும் உருளைக் கிழங்குகளை போலவே ஊட்டச்சத்துக்களை கொண்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிங்க : வங்கதேசத்தில் பெரும் கலவரம்! அவாமி லீக் தலைவர்கள் 30 வீடுகள் தீவைத்து எரிப்பு.. பரபரப்பு பின்னணி!
தோல்வியில் முடிந்த சீனாவின் சோதனை
அமெரிக்காவுக்கு முன்னதாகவே சீனா இந்த சோதனையை மேற்கொண்டது. அதாவது, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் சேஞ்ச் இ 4 என்ற விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் உள்ள வோன் கார்மன் பள்ளத்தில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சிறிய மூடிய பெட்டியில் பருத்தி மற்றும் உருளைக் கிழங்கு விதைகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், ஜனவரி 15, 2019 அன்று அதில் இருந்த பருத்தி விதைகள் முளைத்து வரலாற்று சாதனை படைத்தது. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதாவது, நிலவின் இரவு நேர கடும் குளிரை தாங்க முடியாமல் அந்த செடி கருகியது குறிப்பிடத்தக்கது.