AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்னது தர்மன் அந்த அனிமே சீரிஸின் ரீமேக்-ஆ? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

Rajinikanths Dharman: தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் தர்மன். இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். இந்த திரைப்படமானது பிரபல அனிமே சீரிஸின் ரீமேக்- என கூறப்படுகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

என்னது தர்மன் அந்த அனிமே சீரிஸின் ரீமேக்-ஆ? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
தர்மன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Nov 2026 21:20 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் தர்மன் (Dharman). இந்த படத்திற்கு முன் ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், 2026 அக்டோபர் மாதத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு தற்போது ரஜினிகாந்த், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu) இயக்கத்தில், தர்மன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார்.

இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடித்துவரும் நிலையில், பிரம்மாண்டமான அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தர்மன் படம் பிரபல அனிமே சீரிஸின் ரீமேக் என கூறப்படுகிறது. அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: சூர்யாவுடன் முதல் படம்.. அற்புதமான தமிழ் அறிமுகம் அது எனக்கு – ஸ்ருதிஹாசன் பேச்சு!

அந்த அனிமே சீரிஸின் ரீமேக்-ஆ தர்மன் திரைப்படம்:

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 173வது திரைப்படம்தான் தர்மன். இந்த படத்தய் அஸ்வத் மாரிமுத்து இயக்க, கமல் தயாரித்துவருகிறார். இந்த படமானது அனிமே தொடரான மான்ஸ்டர் (2004 -05) சீரிஸ் ரீமேக் என சமீபகாலமாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. இந்த அனிமே படத்தில் மருத்துவர் ஒருவர், மேயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் வாழ்க்கை ஒரு திருப்பத்தை அடைகிறது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது ஆத்தி இவ யார்ரா பாடல் வீடியோ!

அதே நேரத்தில், மோசமான நிலையில் ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த மருத்துவர் முதலில் அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறார், இது மேயரின் மரணத்திற்குக் காரணமாகிறது. மேலும் குணமான சிறுவன் பின் பல கொலைகளை செய்கிறார். அது அந்த மருத்துவருவரை கொலையாளியாக காட்டுகிறது. இப்படியாக இந்த அனிமே கதை இருக்கும். அதே போல தரமான பட கதை இருப்பதாக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

தர்மன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தர்மன் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துவருவதாக கூறப்படுகிறது.

Follow Us