சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் அண்ணாமலை படம்!
Annamalai Movie Re Release Update | நடிகர் ரஜினிகாந்தின் 77-வது பிறந்த நாள் வருகின்ற டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாள் சிறப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற அண்ணாமலை ரீ ரிலீஸாக உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் தனது 76-வது வயதிலும் பிசியாக நடித்து வருகிறார். இளம் தலைமுறையினர் நடிப்பில் வெளியாகும் படங்களைவிட நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 170-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருடம் வருடம் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் பலப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சூப்பர் ஹிட் அண்ணாமலை படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.




ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் அண்ணாமலை படம்:
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாமலை படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நண்பனால் ஏமாற்றப்பட்டு அதே நண்பனை எப்படி ரஜினிகாந்த் தோற்கடிக்கிறார் என்பதே கதை. இந்தப் படம் 4கே வடிவில் வருகின்ற 11-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… நீ யாருனு காட்டுறதுக்காகதான வந்த.. அன்சரை லெஃப்ட் ரைட் வாங்கிய மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
SUPERSTAR RAJINIKANTH IS BACK ON THE BIG SCREEN! 🔥
ANNAAMALAI 👑 – 4K DOLBY ATMOS REMASTERED 🎬
Superstar Birthday Special | 🇪🇺 Europe Re-Release By @180entert
11 December 2026 — In Cinemas Across Europe!
#Rajinikanth #Annamalai #Thalaivar #Annamalai4K #180Entertainment https://t.co/vlKuLT5rkN
— 180 Entertainment (@180entert) November 24, 2026
Also Read… சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது ஆத்தி இவ யார்ரா பாடல் வீடியோ!