நீ யாருனு காட்டுறதுக்காகதான வந்த.. அன்சரை லெஃப்ட் ரைட் வாங்கிய மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
Ansars Wife Gives Bold Advice; தமிழில் மக்களிடையே பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் பேமிலி வீக் என்ற நிலையில், போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து சந்தித்துவருகிறார்கள். இந்நிலையில் அடாவடி அன்சரின் குடும்பம் வந்த நிலையில், அவரின் மனைவி அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தமிழில் தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 80 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். நேற்று (24/11/2026) வினோத் பாபு மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகிய இருவரின் குடும்பம் வந்த நிலையில், இன்று (25/11/2026) அடாவடி அன்சர் மற்றும் பிருத்வி என இரு போட்டியாளர்களின் குடும்பம் வந்திருந்தது.
இந்நிலையில் அடாவடி அன்சரின் மகன், மகள் மற்றும் மனைவி என மூவரும் வந்திருந்த நிலையில், அவரின் மனைவி அவருக்கு கிடிக்குப்பிடியான கேள்விகளை கேட்டு, அதற்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அது குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளைக் கடந்தது சிலம்பரசனின் மாநாடு – தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
அடாவடி அன்சருக்கு அவரின் மனைவி கொடுத்த அட்வைஸ்:
அந்த ப்ரோமோவில் அடாவடி அன்சரின் மனைவி அவரிடம், “அன்சர் எப்போதுமே பெஸ்ட் ஃபர்பாமர், அப்படி இருந் அன்சர் எப்போது ஏன் மோசமான விளையாட்டாளராக மாறுனாரு. அப்போது அவரு எதோ ஒரு இடத்தில உடைந்து போயிருக்கும். மற்றவர்களுக்காக உன்னை மாத்திக்கவா இங்க வந்த?, நீ யாருனு காட்டதான வந்த.. டாஸ்க்-க.. டாஸ்க்-ஆ பாரு. எமோஷனலாக பார்க்காதே.. நல்லவன்னு நினைக்கிறவர்கள் நல்லவர்களும் இல்ல.. கெட்டவன்-னு நினைக்கிறவர் கெட்டவரும் கிடையாது.
இதையும் படிங்க: பிக்பாஸிடம் செல்லமாக சண்டை போட்ட அன்சரின் மகள்… வைரலாகும் கியூட் வீடியோ!
உங்க டாப் 6-ல ஒரு ஆளாக பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டேன். நீ யாருனு.. உன்ன நிரூபிக்கிறதுக்காக.. நீயே தேர்ந்தெடுத்துவந்த இடம் இது…அதற்காக நீ சண்டை போடு” என அதில் அவருக்கு பக்கம் பக்கமாக அட்வைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 80வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day80 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/2pmnBAAWrH
— Vijay Television (@vijaytelevision) November 25, 2026
இந்த நிகழ்ச்சியானது தற்போது 80 நாட்கள் முடிவில் உள்ளது. இந்நிலையில் இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் இந்த நிகழ்ச்சியானது முழுமையாக நிறைவடைந்துவிடும். வரும் வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கும் நிலையில், அதில் எந்தெந்த போட்டியாளர் வெளியேறுவார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.



