சூர்யா-அருண் மாதேஸ்வரன் கூட்டணி படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது தெரியுமா?
Suriya And Arun Matheshwaran Combo: சூர்யாவின் நடிப்பில் இறுதியாக சீன் படமானது வெளியானது. இதன் பிறகு தற்போது சூர்யா48 படத்தில் பணியாற்றிவருகிறார். இவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படத்தில் இணைவதாக கூறப்பட்டுவரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக அதிகமாக கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் சீன் (Scene Movie). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்கியிருந்த நிலையில், 2026 நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, சூர்யா தற்போது இயக்குநர் டிஜே ஞானவேல் (Director TJ Gnanavel) இயக்கத்தில் சூர்யா48 (Suriya48) என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படமானது உண்மையான கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம்.
சமீபத்தில் இதன் ஷூட்டிங் ஜாப்பானில் நடைபெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு சூர்யா, டிசி பட (DC Movie) இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Director Arun Matheshwaran) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: டிசம்பர் 14 முதல் சோனி விஷாவில் ஒளிபரப்பாகும் ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’! ஏ.எல். விஜய் தயாரிப்பில் புதிய தொடர் அறிமுகம்!
சூர்யா – அருண்மதேஸ்வரன் கூட்டணி படத்தின் தயாரிப்பு நிறுவனம்:
நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுடன் தனது 48வது படத்தை முடித்துவிட்டு. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டிசி படத்தை இயக்கி சிறப்பான வெற்றியை கொடுத்திருந்த நிலையில், இதையடுத்து தற்போது சூர்யாவுடன் அதே மாதிரியான அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: நீ யாருனு காட்டுறதுக்காகதான வந்த.. அன்சரை லெஃப்ட் ரைட் வாங்கிய மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திடம் இப்படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணி குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
#Suriya49 Announcement Next Month ✅🙂↕️
Director #ArunMatheswaran
#Gopichand in talks to do antagonist role
#Anirudh Musicial
Sun pictures – Zhagaram Production
@Suriya_offl ❤
#SceneBlockbuster #Suriya48 https://t.co/tNIoX5UICg
— Aravind SFC (@AravindSuriyaa) November 22, 2026
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் தற்போது சூர்யாவுடன் புதிய படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது. ஆனால் இதை சூர்யா மற்றும் அருண் மாதேஸ்வரன் பக்கத்திலிருந்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. சூர்யா தற்போது தனது 48வது படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இதை முடித்த கையேடு அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் இணைவார் என கூறப்படுகிறது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.