சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது ஆத்தி இவ யார்ரா பாடல் வீடியோ!
Aathi Iva Yarraa Video Song Out Now | நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சீன். இந்தப் படத்திலிருந்து தற்போது ஆத்தி இவ யார்ரா பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்களின் தொடர் வெற்றி நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தடுத்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் படங்களும் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி இருந்தார். படத்தில் சூர்யா உடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




சீன் படத்திலிருந்து வெளியானது ஆத்தி இவ யார்ரா பாடல் வீடியோ:
இந்த நிலையில் இந்த சீன் படத்தில் வெளியான பாடல்கள் முன்னதாக படம் வெளியாவதற்கு முன்பு லிரிக்கள் வீடியோக்களாக வெளியாகி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து வீடியோ பாடல்கள் வெளியாகி வருகின்றது. அதன்படி இந்த சீன் படத்தில் இருந்து தற்போது ஆத்தி இவ யார்ரா என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சீன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:
The Moment We All Went #AathiIvaYarraa 💥 Video Song Out Now 🎶
https://t.co/de7h5Iayjz
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @2D_ENTPVTLTD @SonyMusicSouth
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 25, 2026
Also Read… அரசன் – ராஜன் வகையறா படங்களை ஒன்றாக இயக்குவதில் சவாலா? வெற்றிமாறன் சொன்ன விஷயம்!