AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிக்னல் அட் லெவன் தேர்ட்டி படத்திலிருந்து வெளியானது 3-வது சிங்கிள் வீடியோ!

Poga Poga Pogadhey Video Song | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். இவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சிக்னல் அட் லெவன் தேர்ட்டி. இந்தப் படத்தில் இருந்து தற்போது மூன்றாவது சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது.

சிக்னல் அட் லெவன் தேர்ட்டி படத்திலிருந்து வெளியானது 3-வது சிங்கிள் வீடியோ!
சிக்னல் அட் லெவன் தேர்ட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Nov 2026 17:15 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தை இயக்குநர் பார்த்திபன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் சந்தோஷ் பிரதாப் (Actor Santhosh Prathap). படம் ரசிகர்களிடையே நல்லவ் அரவேற்பைப் பெற்றாலும் நடிகர் சந்தோஷ் பிரதாப்பிற்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. மாறாக வேறு வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடித்ததன் மூலம் மட்டும் இன்றி சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தார் நடிகர் சந்தோஷ் பிரதாப். தொடர்ந்து சினிமாவில் பலப் படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் பிரதாப் இறுதியாக லீடர் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு வில்லனாக நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்து இருந்தார். அதுவும் இவர் மூன்று வேடங்களில் இந்தப் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சந்தோஷ் பிரதாப் படுத்ததாக தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் சிக்னல் அட் லெவன்தேர்ட்டி.

சிக்னல் அட் லெவன்தேர்ட்டி படத்திலிருந்து வெளியானது 3-வது சிங்கிள்:

இந்தப் படத்தை இயக்குநர் மலர்விழி நடேசன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உடன் இணைந்து நடிகர்கள் பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் மற்றும் ஆர்யன் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ள நிலையில்  படத்தில் இருந்து மூன்றாவது பாடலான போக போக போகாதே என்ற பாடல் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் புது போஸ்டர்!

இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அருள் நிதி – அமீர் நடிப்பில் வெளியானது வேட்டசாமி படத்தின் டீசர்!

Follow Us