AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Inji Vellam: ஆச்சி ஆச்சி காமாட்சி.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Aachi Aachi Song: தமிழ் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்துவந்த பிரம்மாண்டமான காதல் திரைப்படம்தான் இஞ்சி வெல்லம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ஆச்சி ஆச்சி என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Inji Vellam: ஆச்சி ஆச்சி காமாட்சி.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
ஆச்சி ஆச்சி பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Nov 2026 17:12 PM IST

தென்னிந்திய திரைத்துறையில் இயக்குநர்கள் மத்தியில் மாபெரும் இயக்குநராக இருந்துவருபவர் மணிரத்தினம் (Director Mani Ratnam). இவரின் இயக்கத்தில் தமிழ், இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இறுதியாக இவரின் இயக்கத்தில் தக் லைஃப் (Thug Life Movie) என்ற படமானது சினிமாவில் வெளியாகியிருந்தது. இதில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silabarasan) இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது சில காரணங்களால் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு, ஆக்ஷன் இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதைக்களமாக மணிரத்தினம் இயங்கிவந்த திரைப்படம்தான் இஞ்சி வெல்லம் (Inji Vellam Movie). இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிக்க, கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி, மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்த படமாக இந்த இஞ்சி வெல்லம் படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rahman) இசையமைத்துவரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து “ஆச்சி ஆச்சி” (Aachi Aachi Song) என்ற லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா-அருண் மாதேஸ்வரன் கூட்டணி படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது தெரியுமா?

விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ஆச்சி ஆச்சி பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த இஞ்சி வெல்லம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவர் கிட்டத்தட்ட 4 கெட்டப்பில் (வேடம்) இந்த திரைப்படத்தில் நடித்துள்ளாராம். அதே போல நடிகை சாய் பல்லவியும் ஓம் படத்தில் முடியை வெற்றிகொண்ட அதே கெட்டப்பில் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இருவருமே காதல் திருமணம் செய்துகொண்டவர்களாக நடிக்க, அவர்களுக்கு இப்படத்தில் இரட்டை பெண் குழந்தைகள் இருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீ யாருனு காட்டுறதுக்காகதான வந்த.. அன்சரை லெஃப்ட் ரைட் வாங்கிய மனைவி – வைரலாகும் ப்ரோமோ!

இப்படமானது முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்ப கதையை மையப்படுத்தி, இயக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமித்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படம் உள்ளது. இப்படம் 2027ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us