AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு.. உதயநிதி பேட்டியில் இடம்பெற்ற சர்ச்சைக்குறிய கருத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது பேட்டி தொடர்பாகவே தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு.. உதயநிதி பேட்டியில் இடம்பெற்ற சர்ச்சைக்குறிய கருத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 Nov 2026 17:07 PM IST

நவம்பர் 25, 2026: தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மீறி கருத்துகளை வெளியிட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள தொடர்புடைய தகவல்களை நீக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் நலன் மற்றும் தனியுரிமை பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

உதயநிதி பேட்டி குறித்து அரசுத் தரப்பு புகார்

இந்த நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசியபோது உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்..

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், அத்தகைய சூழலில் உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மீறி தவறான தகவல்களை உதயநிதி வெளியிட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் – நீதிபதி

அரசுத் தரப்பின் முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் தவறான கருத்துகளைக் கொண்டிருந்தாலோ அல்லது சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களைப் பாதிக்கும் வகையில் இருந்தாலோ அவற்றைச் சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு அரசுத் தரப்புக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?

அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை யாரேனும் மீறியிருந்தால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஏற்கெனவே பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது பேட்டி தொடர்பாகவே தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் தனியுரிமையைப் பாதுகாப்பதுடன், நீதிமன்ற உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற நீதிபதியின் கருத்தும் கவனம் பெற்றுள்ளது.

Follow Us