ரஜினிகாந்த் சாரும் – நெல்சன் சாரும் கல்லூரி நண்பர்கள் போல இருப்பார்கள்… நடிகை மிர்னா மேனன்
Actress Mirna Menon talks about Rajini and Nelson | ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப் குமார் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை மிர்னா மேனன் (Actress Mirnaa Menon). இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு வரை அதிதி மேனன் என்ற பெயரிலேயே நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பிக் பிரதர் என்ற படத்தில் இருந்து தனது பெயரை மிர்னா மேனன் என்று அழைக்கப்பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மிர்னா மேனன் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகளாக நடிகை மிர்னா மேனன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை மிர்னா மேனன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ரஜினி சாரும் – நெல்சன் சாரும் கல்லூரி நண்பர்கள் போல இருப்பார்கள்:
அதில் நடிகை மிர்னா மேனன் பேசியதாவது, நெல்சன் சாரும் ரஜினி சாரும் பார்ப்பதற்கு கல்லூரி நண்பர்களைப் போலவே இருக்கிறார்கள். ‘ஜெயிலர் 2’ சூப்பர் ஷோவின் போது, நெல்சன் சார் ரஜினி சாரிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, நான் எஸ்.ஜே. சூர்யா சாருடன் அமர்ந்திருந்தேன். நான் அவரிடம், சார், நெல்சன் சாருக்குத் தான் யாரிடம் பேசுகிறோம் என்று தெரியுமா? என்று கேட்டேன். உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க நெல்சன் சாரால் மட்டுமே முடியும். அந்த ‘ஜெயிலர் 2’ சூப்பர் ஷோ உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்று என்று மிர்னா மேனன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கலகலப்பாக வெளியானது கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் டீசர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#MirnaMenon:
– Nelson sir and Rajini sir feel like college friends. During the Jailer2 Super Show, when Nelson sir was asking Rajini sir questions, I was sitting with #SJSurya sir. I turned to SJS sir and asked, Sir, does Nelson sir even know who he’s talking to?
– Honestly, only Nelson sir can ask questions like these, The #Jailer2 Super Show was truly unforgettable. https://t.co/CEXU1I1gGR
— Movie Tamil (@_MovieTamil) October 14, 2026
Also Read… ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம்? மக்களின் விமர்சனம் இதோ!