சிக்மா படத்திலிருந்து வெளியானது அய்யயோ அம்மாடி பாடல் வீடியோ
Ayyayo Ammaadi Video Song | இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சிக்மா. இந்தப் படத்தில் இருந்து தற்போது அய்யயோ அம்மாடி என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக அடியெடுத்து வைத்துள்ளார் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவரது தந்தை தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகி உள்ளார். மேலும் இவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பிரபல இயக்குநர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய் சினிமாவிற்கு வந்தது பெரிய சர்ப்ரைஸ் இல்லை என்றாலும் அவர் நடிகராக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இயக்குநராக தனது அறிமுகத்தை பதிவு செய்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவே இருந்தது. அதன்படி ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் எழுதி இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சிக்மா. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து இருந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்தாலும் அவ்வபோது தமிழ் மொழியிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து அய்யயோ அம்மாடி என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.




சிக்மா படத்திலிருந்து வெளியானது அய்யயோ அம்மாடி பாடல் வீடியோ:
இந்த சிக்மா படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள நிலையில் படத்தில் இருந்து தற்போது அய்யயோ அம்மாடி என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நெல்சன் நாடு முழுவதும் மிகவும் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் – ரஜினிகாந்த்!
சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Every moment holds a little love. ♥️ #AyyayoAmmaadi / #OlammoVagalaadi video song from #Sigma is out now. ✨
🔗 Tamil – https://t.co/h7qyCTNbSF
🔗 Telugu – https://t.co/m1aWtpqxIX#SigmaInCinemasNow
@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 @saregamasouth
— Lyca Productions (@LycaProductions) October 14, 2026
Also Read… ஜெயிலர் 2 முதல் ட்ரோன்ஸ் வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!