AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெல்சன் நாடு முழுவதும் மிகவும் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் – ரஜினிகாந்த்!

Rajinikanth talks about Nelson Dilip Kumar | ஜெயிலர் 2 படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நெல்சன் நாடு முழுவதும் மிகவும் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் – ரஜினிகாந்த்!
நெல்சன் திலீப் குமார் மற்றும் ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 13:19 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் நாளை 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஜெயிலர் 2 படம். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். மேலும் முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான ஜெயிலர் பாகம் ஒன்று படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி ஜெயிலர் 2 படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் குறித்து பேசியது ரசிகர்களிடையே வைரலானது.

அப்போதே இவர்களின் காம்போ மிகவும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதிலும் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நாடு முழுவதும் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்:

அந்த வகையில் நெல்சன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் தயாரிப்பு நிறுவனங்களும் பிரம்மாண்டமான வாய்ப்புகள் மற்றும் சாதனை அளவிலான ஊதியத்துடன் வரிசையில் நின்றதால், நெல்சன் சார் நாடு முழுவதும் மிகவும் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார்.

நெல்சனிடம் உள்ள மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் மிகுந்த புத்திசாலி. அவரது வாழ்க்கைப் பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது; ஆனால் சமீபத்தில், அவர் 18-வது மாடியில் ஒரு அழகான அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். அதற்காக எனக்கு அவர் மீது பொறாமையாக இருக்கிறது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சார் ஒண்ணுமே இல்ல நீங்க… டிடிஃஎப் வாசனிடம் வாய் தகராறில் ஈடுபட்ட அக்ஷிதா – தீயாய் பரவும் ப்ரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பூஜா ஹெக்டேவின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்டது ஸ்ரீ ஸ்ரீ படக்குழு!

Follow Us