Suriya: இன்னும் 25 நாட்களில்.. சூர்யாவின் சீன் படத்தின் நியூ போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
Scene Movie: கோலிவுட் சினிமாவில் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் சீன். இப்படமானது வெளியாக இன்னும் 25 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்த ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மக்கள் மத்தியில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த விதத்தில் இவர் மலையாள சினிமாவில் ஆவேஷம் என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் இணைந்த திரைப்படம்தான் சீன் (Scene). கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் சூர்யா47 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா (Nazriya) நடித்துள்ளார். முதல் முறையாக இந்த காம்போ இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. அந்த விதத்தில் இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதற்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் SK27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர்!
சூர்யாவின் சீன் படத்தின் ரிலீஸ் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
25 Days to go for the #SCENE Diwali! 🧨
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) October 12, 2026
சூர்யா மற்றும் நஸ்ரியாவின் சீன் பட கதாபாத்திரம்:
இந்த் சீன் திரைப்படமானது புலனாய்வு மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்ட்டுள்ளதாம். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா இன்பராஜ் என்ற வேடத்திலும், நஸ்ரியா மாயா என்ற வேடத்திலும் மற்றும் நடிகர் நஸ்லென் ஈஸ்வரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளார்களாம். இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவர் இப்படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் மண்டாடி பட வில்லன்.. சூரி பகிர்ந்த டைட்டில் புரோமோ!
சூர்யாவின் விசாரணைக்கு உதவி செய்யும் பெண்ணாக நடிகை நஸ்ரியா நடித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் 3வது வெளியாகும் படமாக அமைந்திருக்கும் நிலையில், இதுவும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.