AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene Movie : ஆத்தி இவ யார்ரா… சூர்யாவின் சீன் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

Scene Movie First Single: தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் இவர் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் சீன். இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ஆத்தி இவ யார்ரா வெளியாகியுள்ளது.

Scene Movie : ஆத்தி இவ யார்ரா… சூர்யாவின் சீன் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!
ஆத்தி இவ யார்ரா பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Oct 2026 18:06 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, தற்போது தென்னிந்திய சினிமாவே போட்டும் நடிகராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரை அவரின் ரசிகர்கள் “தி ஒன்” (The One) என்றும் பாசமுடன் அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்க, கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. இந்த படத்திற்கு பின் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா நடித்துவந்த திரைப்படம்தான் சீன் (Scene). இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான நிலையில், ஆரம்பத்தில் சூர்யா47 என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு இப்படத்திற்கு “சீன்” என படக்குழு டைட்டில் வைத்திருந்தது. இதில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், முதல் சிங்கிளாக “ஆத்தி இவ யார்ரா” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் இந்தியன் 3 பட கதை இப்படியா இருக்கும் – இணையத்தில் வைரலாகும் தகவல்!

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஆத்தி இவ யார்ரா பாடல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

சூர்யாவின் சீன் படத்தில் அவரை வேடம் என்ன:

சூர்யாவின் இந்த சீன் படத்தின் ஷூட்டிங்காணாது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறப்பாக தொடங்கியிருந்தது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகரையாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அநடிகை நஸ்ரியா நசீம் நடித்துள்ளார். இந்த ஜோடியானது முதல் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கண் தெரியாத வேடத்திலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கண் தெரியாத சூர்யாவின் விசாரணைக்கு உதவும் பெண்ணாக நஸ்ரியா நசீம் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் எச் வினோத்தின் படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தால்… இரா. சரவணன் ஓபன் டாக்

மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக இளம் நடிகர் நஸ்லென் நடித்துள்ளாராம். இப்படமானது இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us