AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene Movie: சூர்யாவின் சீன் பட ஓடிடி உரிமை லாக்.. அட இதனை கோடிகளுக்கு விற்பனையா?

Scene Movie OTT Rights: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் இயக்கத்திலும் உருவாகியுள்ள புதிய படம்தான் சீன். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், விற்கப்பட்ட தொகை விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Scene Movie: சூர்யாவின் சீன் பட ஓடிடி உரிமை லாக்.. அட இதனை கோடிகளுக்கு விற்பனையா?
சூர்யாவின் சீன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2026 22:00 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் நட்சத்திர நாயகனாக படங்களில் நடித்துவருபவர்தான் சூர்யா (Suriya). இவரை ரசிகர்கள் தி ஒன் (The One) என்றும் அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகியிருந்தது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் வெளியான கருப்பு (Karuppu) திரைப்படம் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons). இந்த இரு படங்களும் 2026ம் ஆண்டில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. அதில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலில் சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்தான் சீன் (Scene).

இப்படமானது சூர்யா47 என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டுவந்தது. இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம் மற்றும் விற்கப்பட்ட தொகை குறித்த தகவல்களும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: முடிஞ்சா எலிமினேட் பண்ணிக்காட்டுங்க… ஜேசனிடம் சவால் விட்ட கரிஷ்மா – பரபரப்பான புரோமோ!

சூர்யாவின் சீன் பட ஓடிடி உரிமம் மற்றும் விற்கப்பட்ட தொகை குறித்த தகவல்:

சூர்யாவின் இந்த திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க: கைதி 2 படத்திற்கு அதிக சம்பளம் கேட்டேனா? – உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ரூ 88 கோடிகளுக்கு இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையைப் பெற்றுள்ளதாம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீன் பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த எக்ஸ் பதிவு:

சூர்யாவின் சீன் பட முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்:

சூர்யாவின் இந்த சீன் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நசீம் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் மலையாள இளம் நடிகர் நஸ்லென் நடித்துவருகிறார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அந்த விதத்தில் இப்படத்தின் முதல் பாடல் அக்டோபர் 15ம் தேதிகுள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us