AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya: அன்பை மட்டுமே விதைப்போம்.. சோசியல் மீடிவில் பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா ஓபன் டாக்!

Suriya Responds To Criticisms: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வெளியானது. சமீபத்தில் ரசிகர்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, அதில் சோஷியல் மீடியாவில் பரவும் விமர்சனங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

Suriya: அன்பை மட்டுமே விதைப்போம்.. சோசியல் மீடிவில் பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா ஓபன் டாக்!
சூர்யா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Sep 2026 20:40 PM IST

சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தற்போது தமிழ் இயக்குநர்கள் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி இயக்குநர்களுடனும் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்யா, மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் ராதிகா சரத்குமார் போன்றவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அந்த விதத்தில் மேலும் தற்போது இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சீன் (Scene) படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இன்று (26/09/2026) அகில இந்திய சூர்யா ரசிகர்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்துகொண்டார். அதில் பேசிய சூர்யா, தன்மீது இணையதளத்தில் பரவிவரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!

சோஷியல் மீடியாவில் தன்னைப்பற்றி பரவும் விமர்சனங்கள் குறித்து பகிர்ந்த சூர்யா:

அந்த ரசிகர்கள் மன்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “அன்பை மட்டுமே விதைப்போம், ஒரு சோசியல் மீடியா ல ஒரு முட்டாள் ஒரு பதிவை போட்டான் அப்டிங்கிறாங்க, நம்மளும் பேச ஆரமிக்கணும் போதுதான், நம்ம ஹேர்ட் ஆகிடுவோம். நம்ம நாமலமே இருப்போம். அவங்க அவங்களாவே இருக்கட்டும், நம்ம எதுவும் பேச தேவையில்லை.

இதையும் படிங்க: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?

அவங்களுக்கு புரிய வைக்கணும், மாத்தணும்-னு முயற்சி பண்ண கொஞ்சம் கஷ்டம்.. சில பேருக்கு புரியும், முக்காவாசி பேருக்கு அது புரியாது, உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்க வேண்டாம்.. உங்களுக்கு புடிச்சத சின்சியரா தான் பண்ணுங்க. நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்தார்.

சோஷியல் மீடியாவின் விமர்சனங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ பதிவு:

சூர்யாவின் நடிப்பில் இந்த ஆண்டில் 3வது வெளியாக காத்திருக்கும் படம்தான் சீன். இந்த படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் உருவாக்குகிறது. இந்த படமானது பான் இந்திய ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us