AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SK27: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!

SK27 Movie Shooting Pooja: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் SK27 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

SK27: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!
எஸ்கே27 திரைப்பட படப்பிடிப்பு பூஜை கிளிக்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Sep 2026 17:45 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புத்தம் புது திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் பராசக்தி (Parasakthi). 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றுவந்தது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின் தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில் சேயோன் (Seyon) படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh narayanan) இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படமும் உள்ளது. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

அந்த படம்தான் SK27. இதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கும் நிலையில், சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இதன் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் SK27 திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு:

சிவகார்த்திகேயனின் SK27 திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றிருந்தார். இதன் பிறகு இவர் சிலம்பரசனின் 49 வது படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் புதிய திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் இதில் ஒரு கேங்ஸ்டராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா… அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் – நேற்று நடந்தது என்ன?

இந்நிலையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளார். மேலும் பல பிரபலங்களும் இதில் நடிக்கிறார்கள். முதல் முறையாக சிவகார்த்திகேயனின் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், 2027ம் ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கில் முழுமையாக சிவகார்த்திகேயன் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது.

Follow Us