AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா… அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் – நேற்று நடந்தது என்ன?

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 20-வது நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் என்ன எல்லாம் நடந்தது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா… அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் – நேற்று நடந்தது என்ன?
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Sep 2026 10:24 AM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வருகின்றது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சீசனுக்கும் புதுப் புது விசயங்களை சேர்த்து விளையாட்டில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார்கள் நிகழ்ச்சி குழு. அதன்படி இதுவரை முடிந்த 9 சீசன்களில் எந்த சீசன்களிலும் இல்லாத ஒன்றாக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல நிகழ்வுகள் புதிதாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமான விசயங்கள் என்ன என்றால் டெமோகிரஸி அறை மற்றொன்று லீடர் எக்ஸிட். இந்த இரண்டு விசயங்களுமே இந்த சீசனில் அதிகப்படியான சுவாரஸ்யத்தை மக்களிடையே ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடந்ததைப் பார்க்கலாம்.

இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் லீடராக அவினாஷ் தேர்வான நிலையில் தொடர்ந்து ஒரு சில போட்டியாளர்கள் அவர் மீது வரிசையாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ள லீடர் எக்ஸிட் என்ற முறையில் அவினாஷ் மூன்று போட்டியாளர்களான ஆனந்தி, முத்தழகி மற்றும் லக்‌ஷ்மி பிரியாவை தேர்வு செய்தார். இதில் யார் வெளியேறவேண்டும் என்று மற்ற போட்டியாளர்கள் ஓட்டிங் முறையில் தேர்வு செய்து வெளியேற்றப்படுவார்கள்.

லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா:

இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் அதிகப்படியான தேர்வாக லக்‌ஷ்மி பிரியா இருந்த காரணத்தால் அவர் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவினாஷை குரூப்பிசம் செய்வதாக கூறியவர்கள் அவர்களே குரூப்பாக அமர்ந்துகொண்டு பேசியும் வந்தனர். மேலும் வீட்டைவிட்டு செல்லும் போது லக்‌ஷ்மி பிரியா அவினாஷிற்கு சாபம் விடுவது போல பேசியதும் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக… ஓம் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பது குறித்து தனுஷ் சொன்ன விசயம்

இந்த நிலையில் இன்று சனி கிழமை என்பதால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வாரம் முழுவதும் நடந்த விசயங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவாரா என்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய எபிசோட் வெளியாகும் போதே அது தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்… திணறிய எதிரணி தலைவர் ராகவ் – வைரலாகும் வீடியோ!

Follow Us