AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த ஆனந்தி – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் வைல்கார்ட் போட்டியாளராக வந்தவர் நடிகை ஆனந்தி. இவர் வந்ததில் இருந்தே தொடர்ந்து மற்ற போட்டியாளர்களுடன் நட்பை பாராட்ட முடியாமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த ஆனந்தி – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2026 15:29 PM IST

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். தொடர்ந்து 9 சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது. பிரபலங்கள் மற்றும் காமென் மேன்கள் என மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து பல சண்டைகளையும் சர்ச்சைகளையுமே சந்தித்து வருகின்றது. முன்பு இருந்த சீசன்களைப் போல இந்த சீசனில் போட்டியாளர்களிடையே இணக்கமான சூழல் என்பது இதுவரை ஏற்படவில்லை.

வீட்டில் உள்ள மொத்த போட்டியாளர்களும் தங்களின் வெற்றியை நோக்கி சுயநலத்துடனே இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வைல்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் தமிழ் வீட்டிற்குள் வந்த ஆனந்தி தொடர்ந்து அனைவரிடமும் நெகட்டிவான கருத்துகளைப் பெற்று வருத்தமடைந்தே வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த ஆனந்தி:

அந்த வகையில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷனில் மொத்தம் 10 பேர் ஆனந்தியின் பெயரை கூறியது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைப்பெற்ற டாஸ்கில் பிக்பாஸ் வீட்டின் ட்ராமா குயின் என்ற பட்டத்திற்கும் அழுதார். அதனைத் தொடர்ந்து இன்று வீட்டின் லீடர் அவினாஷ் அவரது எவிக்‌ஷன் ப்ராசசில் மூன்று பேரை தேர்வு செய்கிறார். அதில் ஆனந்தி, முனியம்மா மற்றும் முகேஷை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வருத்தத்தில் ஆழ்ந்த நடிகை ஆனந்தி இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கதவின் அருகில் சென்று பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மூன்றாவது முறையாக தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் பதிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஃபகத் ஃபாசில் நடிப்பில் ஃபேண்டசி பாணியில் வெளியானது Dont Trouble The Trouble படத்தின் ட்ரெய்லர்!

Follow Us