ஃபகத் ஃபாசில் நடிப்பில் ஃபேண்டசி பாணியில் வெளியானது Dont Trouble The Trouble படத்தின் ட்ரெய்லர்!
Dont Trouble The Trouble Movie Trailer | நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் ஃபேண்டசி காமெடி பாணியில் தற்போது உருவாகி உள்ள படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் இதயம் முரளி. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து இருந்தாலும் நடிகர் ஃபகத் பாசில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் ஃபகத் பாசில். அந்த வகையில் இவர் இறுதியாக தனது நண்பர்கள் உடன் இணைந்து மலையாள சினிமாவில் தயாரித்த படம் பெத்தலேக குடும்ப யூனிட். நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்த இந்தப் படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்று சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




ஃபகத் நடிப்பில் வெளியானது Dont Trouble The Trouble பட ட்ரெய்லர்:
இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசில் தற்போது கதையின் நாயகனாக நடித்து தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தில் ஃபகத் பாசில் உடன் இணைந்து நடிகர்கள் சாரா பாலேகர் மற்றும் சௌரப் சச்தேவா முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Raaka: ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின்.. கின்னஸ் சாதனை படைத்த ராக்கா படக்குழு!
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
More of Suri… More of Divya…. More of their lives.
Here’s the trailer of #DontTroubleTheTroublehttps://t.co/0hTaa7AqI3
This team has put together something very warm, fun and full of life 🙂 Hope they cast their spell on u too.See you all at the cinemas on October 2nd 🤗
— rajamouli ss (@ssrajamouli) September 22, 2026
Also Read… சக போட்டியாளர்களை செய்கையால் கடுப்பேத்திய முனியம்மாள் – கடுப்பான லட்சுமி பிரியா – வைரலாகும் புரோமோ!