இதயம் முரளி படத்தில் ஃபகத் பாசில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை – இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்
Director Aakash Baskaran | தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இதயம் முரளி. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த நிலையில் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் இந்தப் படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர் ஃபகத் பாசில் இந்த இதயம் முரளி படத்தில் ஒரு நீண்ட கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார். இது குறித்து இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இதயம் முரளி படத்தில் ஃபகத் பாசில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை:
இதயம் முரளி படத்தில் ஃபஹத் ஃபாசில் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் எஸ்.ஜே. சூர்யா சாரைத்தான் அணுகினோம். ஆனால், ஒரு சிறிய கௌரவத் தோற்றத்தில் நடிக்க விருப்பமில்லை என்று அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகு ஃபஹத் ஃபாசில் சாரிடம் பேசி, படத்தின் ஒரு தொகுப்பு வடிவத்தைக் காட்டினேன். அவர் மறுப்பார் என்றுதான் நினைத்தேன், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நேரம் இருந்ததால், அவருடைய காட்சிகளை நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் படமாக்கினோம். அவருக்கு முன்பாகவே ஜோனிட்டாவின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன என்றும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #AakashBaskaran:
“#SJSuryah sir is the initial choice for FahadhFaasil sir’s character in #IdhayamMurali. But SJSuryah sir denied that he don’t want to do cameo🌟. Then I asked #FahadhFaasil sir & shown business cut of the film, i thought he would deny, surprisingly he… pic.twitter.com/ztjMzVCvCl
— AmuthaBharathi (@CinemaWithAB) July 21, 2026
Also Read… கோழையும் வீரனும் ஒன்னு, வீரமான கோழையும் உண்டு – 9 ஆண்டுகளைக் கடந்தது விக்ரம் வேதா படம்