AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டா குஸ்தி 2 படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு? அப்டேட் வெளியிட்ட படக்குழு

Gatta Kusthi 2 Movie Box Office Collection Update | தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கட்டா குஸ்தி 2 படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு? அப்டேட் வெளியிட்ட படக்குழு
கட்டா குஸ்தி 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2026 12:01 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து சினிமாவில் படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து உள்ள நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் உருவாகி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான கட்டா குஸ்தி 2 படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உள்ள இந்த கட்டா குஸ்தி 2 படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டா குஸ்தி 2 இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்த கட்டா குஸ்தி 2 படம் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கட்டா குஸ்தி 2 படம் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 55 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – நடிகர் சூர்யா

கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் படத்தின் காட்சிகளைப் பார்த்து திருப்தியடைந்த தயாரிப்பாளர்? வைரலாகும் தகவல்

Follow Us