AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே படத்தில் ஓஹோ.. அடுத்த படம் புஷ்.. இந்த கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா?

Kollywood Actress Childhood Photo: இணையதளங்களில் அடிக்கடி இளம் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகிவரும். அந்த விதத்தில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகைனு தெரிகிறதா?. அந்த சிறுமி யார் மற்றும் அவரின் படங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஒரே படத்தில் ஓஹோ.. அடுத்த படம் புஷ்.. இந்த கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2026 08:16 AM IST

சினிமா வட்டாரங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை (Actresses) பற்றிய அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவது வழக்கமே. அதேபோல அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அவர்களின் சிறுவயது கியூட் போட்டோஸ் இணையத்தில் பரவிவரும். அந்த விதத்தில், மேலே இருக்கும் புகைப்படத்தில் இரு குழந்தைகள் இருகிறார்கள். அதில் முதலாவது நீல நிற உடையில் இருக்கும் சிறுமி யார் என தெரிகிறதா?. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற சினிமாவில் நாயகியாக நடித்துவருபவர். இவர் 2012ம் ஆண்டில் மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்தார். பின், தமிழில் 2018ம் ஆண்டில் இயக்குநர் பாலாவின் (Director Bala) இயக்கத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடிகையாக அறிமுகமான முதல் படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது.

பின் அறிமுக நடிகரின் படத்தில், 2022ம் ஆண்டில் நடித்திருந்தார். இந்த ஒரு படம் அவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை கொடுத்தது. ஆனால் இதற்கு பின் நடித்த படங்கள் கைகூடவில்லை. மேலும் தற்போது இவர் ஜீவாவுக்கு (Jiiva) ஜோடியாக படத்தில் நடித்துள்ளார். அட இந்த சிறுமி நடிகை இவனாதான் (Ivana).

இதையும் படிங்க: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!

நடிகை இவானவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@i__ivana_)

நடிகை இவனா சினிமாவில் கடந்துவந்த பாதை:

நடிகை இவனா கேரளாவில் பிறந்தவர். இவரின் உண்மையான பெயர் அலெனா ஷாஜி. சினிமாவில் பிரபலத்திற்காக இவனா என மாற்றிக்கொண்டார். இவர் மலையாளத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான மாஸ்டர்ஸ் என்ற படத்தில் இளம் வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு கதாநாயகியாக அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் நாச்சியார். 2018ம் ஆண்டில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில், வெளியான இப்படத்தில் நடிகையானார். இதில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இதற்கு பின் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போல் உள்ள இளம் பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிறகு 2 வருட இடைவெளிக்கு பின் லவ் டுடே படத்தில் நடித்திருந்தார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமான இப்படத்தில், நிகிதா என்ற வேடத்தில் நடித்து பேமஸானார். பின் தெலுங்கில் சிங்கிள் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருந்தார். தற்போது நடிகை இவனா ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியாக இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலையில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஜன நாயகன் வெளியீட்டால் தள்ளிப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us