இந்த போட்டோவில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? கிரிக்கெட் டூ நடிகரானவர் இவர்!
Tamil Actor Childhood Photo: இணையதளங்களில் அவ்வப்போது நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த விதத்தில், இந்த போட்டோவில் போலீஸ் காஸ்டியூமில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?. தற்போது நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அட இவர்தான்.
சினிமாவில் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் நடிகைகள் (Tamil Cinema Actors) இருக்கிறார்கள். அவர்களின் அடையாளம் தெரியாத அல்லது சிறுவயது போட்டோக்கள் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வைரலாகிவரும். இந்நிலையில், மேலே உள்ள புகைப்படத்தில் உண்மையான போலீஸுடன் போலீஸ் கெட்அப்பில் (Police getup) இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?. இந்த சிறுவன் ஆரம்பத்தில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டார். கிரிக்கெட் என்ற விளையாட்டில் பெயர்போனவராம். ஆரம்பத்தில் சினிமாவில் நடிகராக நுழைவதற்கு முன் கிரிக்கெட் விளையாட்டையை நம்பியிருந்தாராம். அதே போல சினிமாவிலும் கபடி என்ற விளையாட்டை மையமாக கொண்ட படத்தின் (Kabaddi movie) மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் த்ற்போதுவரையிலும் கதாநாயகனாகவே படங்களில் நடிக்கிறார்.
தற்போது வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் தனது சொந்த படங்களை தயாரித்துவருகிறார். ஆரம்பத்திலிருந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இந்த நடிகர், பிரபல விளையாட்டு வீராங்கனையைதான் 2வது திருமணம் செய்துள்ளார். அட அந்த போலீஸ் உடையில் இருப்பது வேறுயாருமில்லை, நடிகர் விஷ்ணு விஷால்தான் (Vishnu Vishal).
இதையும் படிங்க: தமிழ் டப்பிங்ல இருக்க இந்த அமெரிக்கன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்… வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?




நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
கிரிக்கெட் வீரன் டூ கோலிவுட் நாயகனாக விஷ்ணு விஷால் :
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 1984ம் ஆண்டில் வேலூரில் பிறந்தவர். இவரின் தந்தை தமிழகத்தில் டிஜிபி-யாக பணியாற்றினார். தந்தை போலீசாக பணியாற்றிய நிலையில், இவருக்கு சிறுவயதிலிருந்து போலீசாகவேண்டும் ஆசை இருந்ததாம். மேலும் அதன் காரணமாக சிறுவயதிலிருநு, விளையாட்டின்மீது ஆர்வத்தை புகுத்திவந்தார். இவர் தனது கல்லூரி படிப்பின்போதே, தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியில் பயின்றுவந்தார். மேலும் இவரும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரன்தான். பின் சினிமாவின் மீட்டது வந்த ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் பல வாய்ப்புகள் இவருக்கு தட்டிப்போன நிலையில், இவருக்கு அறிமுக ஹீரோவாக அமைந்த படம் வெண்ணிலா கபடி குழு.
இதையும் படிங்க: நடிகைகளை கண்ணியமாக பாருங்க… இது கேவலமாக இல்லையா? – கிரிதி சனோன்!
2009ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி மற்றும் ஜீவா போன்ற படங்கள் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது. ஹீரோவாக படங்களில் பணியாற்றிய இவர், தற்போது தனது சொந்த படங்களை தயாரிப்பாளராகவும் தயாரித்துவருகிறார். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியான முதல் படம்தான் கட்டா குஸ்தி 2 என்பது குறிப்பிடத்தக்கது.