பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போல் உள்ள இளம் பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Young Girl like Silk Smitha is going viral on the internet |பான் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தற்போது வரை மக்களின் மனதில் நீங்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான ஒட்டப்பெட்டவர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சில்க் ஸ்மிதா. தொடர்ந்து மலையாள சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்களில் நடித்த பிறகு மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கினார். அதன்படி தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் கடந்த 1980-ம் ஆண்டும், இந்தி மொழியில் கடந்த 1983-ம் ஆண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் அடுத்தடுத்து பலப் படங்களில் பிசியாக நடித்து வந்தார் நடிகை சில்க் ஸ்மிதா. இந்திய சினிமாவில் கடந்த 80 மற்றும் 90களில் கவர்ச்சி நடிகை என்றால் உச்சத்தில் இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து மக்களிடையே பேசப்பட்டு வருகிறார் சில்க் ஸ்மிதா.
பான் இந்திய மொழிகளில் கொடிக்கட்டி பறந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் உயிரிழந்த போது ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இவர் கவர்ச்சி நடிகையாக படங்களில் நடித்து இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் மற்றவர்கள் புகழ்ந்து பேசும் நபராகவே வாழ்ந்து உள்ளார். இவரது குணம் மற்றவர்களுக்கு உதவுவதாகவே இருந்தது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.




பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போல் உள்ள இளம் பெண்:
இந்த உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் என்ற பேச்சு இருக்கிறது. அதன்படி இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு பல பிரபலங்கள் போல உள்ளவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா மாதிரி இருப்பதாக முன்பு ஒரு இளம் பெண்ணின் வீடியோ வைரலானது. அந்த பெண் விஷ்ணு பிரியா காந்தி மார்க் ஆண்டனி படத்தில் சில்க்ஸ் மிதா மாதிரி வேடம் அணிந்து நடித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மற்றொரு பெண் நடிகை சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் அந்த பெண் பார்ப்பதற்கு நடிகை சில்க் ஸ்மிதா மாதிரி இருப்பதாக அவரது நண்பர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Suriya47: தி ஒன் அரேவ்ஸ் ஸூன்.. சூர்யா47 பட ஷூட்டிங் நிறைவடைந்ததாக வெளியான வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
అచ్చం సిల్క్ స్మిత లాగే వుంది, కొంచం లావుగా వుంది.#SilkSmitha pic.twitter.com/Jk1LX1mn1X
— TVR Media 🚩🚩🚩 (@Tvr_Media7) July 16, 2026
Also Read… மண்டாட்டி மண்டாட்டி பாடலின் புர்மோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட சூரி – வைரலாகும் போஸ்ட்