AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மண்டாட்டி மண்டாட்டி பாடலின் புர்மோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட சூரி – வைரலாகும் போஸ்ட்

Mandaadi Mandaadi song promo glimpse video out now | தமிழ் சினிவில் நடிகர் சூரி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வருகின்ற 18-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பாடலின் புரமோ வைரலாகி வருகின்றது.

மண்டாட்டி மண்டாட்டி பாடலின் புர்மோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட சூரி – வைரலாகும் போஸ்ட்
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 19:54 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார். காமெடி நடிகராக இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் தொடர்ந்து சூரியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதில்லை. தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அதன்படி நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மாமன். தொடந்து நாயகனாக நடித்ததில் இருந்த் மிகவும் அழுத்தமான கதைகளில் நடித்து வந்த சூரி மிகவும் ஜாலியான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாமன் படத்தில் நடித்து இருந்தார்.

ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மண்டாட்டி. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றது.

மண்டாட்டி மண்டாட்டி பாடலின் புர்மோ க்ளிம்ஸ் வீடியோ இதோ:

தொடர்ந்து மண்டாட்டி படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் மண்டாட்டி படத்தின் முதல் சிங்கிளான மண்டாட்டி மண்டாட்டி என்ற பாடலின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த புரோமோ வீடியோவின் கிளிம்ஸ் வீடியோவை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் மண்ணாட்டி மண்டாட்டி என்ற அந்தப் பாடல் வருகின்ற 18-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Fauzi: பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அட இந்த தேதியிலா?

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS காட்சிகள் எப்போது? முழு விவரங்கள் இதோ!

Follow Us