AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mandaadi: சூரியின் மண்டாடி படத்தின் புரோமோ பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Mandaadi Movie Song Promo: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது லீட் நடிகராக சினிமாவில் நடித்துவருபவர் சூரி. இவரின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவருவதுதான் மண்டாடி. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் நிலையில், முதல் பாடல் புரோமோ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Mandaadi: சூரியின் மண்டாடி படத்தின் புரோமோ பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
மண்டாடி மண்டாடி புரோமோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2026 19:34 PM IST

அங்கீகாரம் இல்லாத கதாபாத்திராங்கிளில் நடித்து, பின் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலாமானவர் சூரி (Soori). இவர் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் அஜித் குமார் உள்ளிட்ட பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியாகியிருந்த இப்படமானது, தமிழ் சினிமாவில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு தமிழில் தொடர்ந்து நடிகற்கவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த படம் மாமன் (Maaman). 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தை விலங்கு வலைத் தொடர் இயக்குநர் பிரசாந்த் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி இணைந்து நடித்துவந்த புது படம்தான் மண்டாடி (Mandaadi).

இதை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைக்கும் நிலையில், முதல் பாடல் புரோமோ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அஜித் குமாரின் AK64 படத்தில் இணையும் பேமஸ் நடிகை.. அட அவர்தான்!

மண்டாடி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில், சூரி இணைந்துள்ள புது படம்தான் மண்டாடி. இந்த படமானது கடற்கரை மற்றும் கடல் கப்பல் போட்டி சார்ந்த கதைங்கலத்தில் உருவாகியுள்ளது. அந்த அந்த விதத்தில், இப்பட முதல் பாடலாக உருவாகியுள்ளதுதான் மண்டாடி மண்டாடி. இதன் ப்ரோமோ வீடியோ வரும் 2026ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டாடி பட முதல் பாடல் புரோமோ வீடியோ ரிலீஸ் குறித்து நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மண்டாடி பட நடிகர்கள்:

நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மண்டாடி. இதில் சூரி கப்பலோட்டியாக நடித்துள்ளார். அவருடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும் இதில் சூரிக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நாயகியை மையமாக வைத்து வெளியாகும் படங்கள்

மேலும் இவர்களுடன் நடிகர் சத்யராஜ், பாலா சரவணன் மற்றும் மிதுன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்பட ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்துடன் டிமாண்டி காலனி 3 மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி போன்ற படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us