AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Soori: விஜய், சூர்யா தனுஷை தொடர்ந்து.. சூரிக்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை?.. அட இவர்தான்!

Soori07 Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது லீட் நடிகராக படங்களில் நடித்து அசத்திவருபவர் சூரி. இவரின் நடிப்பில் 7வது படத்தை அயலான் பட இயக்குநர் ஆர்.ராஜ்குமார் இயக்கவுள்ளர். இந்த படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என பார்க்கலாம்.

Soori: விஜய், சூர்யா தனுஷை தொடர்ந்து.. சூரிக்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை?.. அட இவர்தான்!
சூரியின் 7வது திரைப்பட அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Mar 2026 09:34 AM IST

அயலான் திரைப்படத்தின் (Ayalaan) மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் (R.Ravikumar). இவர் இதற்கு முன், இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த இரு படங்களுமே இவருக்கு ஹிட் கொடுத்திருந்தது. இந்த படங்களை தொடர்ந்து, தற்போது சூரியின் (Soori) நடிப்பில் புதிய திரைப்படத்தில் ஆர்.ரவிக்குமார் இணையவுள்ளார். இந்த படமானது தற்காலிகமாக “சூரி07” (Soori07) என அழைக்கப்பட்டுவருகிறது. இதை டியூட் மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. அந்த விதத்தில் இப்படமானது கடந்த 2015ம் ஆண்டில் சென்னையில் நடந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாம்.

இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், அது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக விஜய், சூர்யா மற்றும் தனுஷுடன் நடித்த மமிதா பைஜூ (Mamitha Baiju) நடிக்கவுள்ளாராம். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: வலிமைக்கு அப்பறம் என்னோட கருப்பு அப்டேட்டிற்காகதான் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தனர் – ஆர்.ஜே.பாலாஜியின் கலகல பேச்சு!

சூரியின் 7வது படத்தின் நடிகை குறித்த எக்ஸ் பதிவு:

நடிகை மமிதா பைஜூ மலையாள நடிகையாக இருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக லீட் நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்துவருகிறார். விஜய்யின் ஜன நாயகன் படத்தில் அவருக்கு மகளாகவும், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் அவரின் காதலி, தனுஷின் கர படத்தில் அவரின் மனைவி என தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இதையும் படிங்க: பிரபல நடிகை ஜனனிக்கு டும் டும் டும்… வைரலாகும் போட்டோஸ்!

அந்த விதத்தில் தற்போது இவர் சூரிக்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது. இது எந் அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் சூரி07 படத்தின் நடிகை யார் என படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மமிதா பைஜூ தொடர்ந்து தமிழில் நடிக்க தொடங்கிய நிலையில், இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

Follow Us