AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Salman Khan: சல்மான்கானுடன் புது படத்தில் கைகோர்த்த வாரிசு பட இயக்குநர் – ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Vamshi Paidipally - Salman Khan Union: தளபதி விஜய்யின் வாரிசு படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் பிரபலமானவர் இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி. இவர் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் புது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் அறிவித்துள்ளார்.

Salman Khan: சல்மான்கானுடன் புது படத்தில் கைகோர்த்த வாரிசு பட இயக்குநர் – ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சல்மான் கான் மற்றும் வம்ஷி பைடிபள்ளிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Mar 2026 16:33 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் வம்ஷி பைடிபள்ளி (Vamshi Paidipally). இவர் தமிழில் தளபதி விஜயை (Thalapathy Vijay) வைத்து, வாரிசு (Varisu) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். குடும்ப கதைக்களத்தில் கடந்த 2023ம் ஆண்டில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படம் தமிழில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே மக்களிடையே பெற்றிருந்தது. அந்த விதத்தில் இவர் இறுதியாக விஜய்யின் வாரிசு படத்தை இயக்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புது படத்தை இயக்கவுள்ளார். அந்த விதத்தில் தனது புது படத்தில், இந்தி நடிகர் சல்மான்கானுடன் (Salman Khan) இணைந்துள்ளார்.

இது தொடர்பான விஷயங்கள் சமீப காலமாக பேசப்பட்டுவந்த நிலையில், தற்போது அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி வெளியிட்டுள்ளார். இந்த படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு (Dil Raju) தயாரிக்கவுள்ளாராம். மேலும் இதன் ஷூட்டிங் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லீடர் பட விழாவில் அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்!

சல்மான்கானுடன் இணையும் புது திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட வம்ஷி பைடிபள்ளி :

சல்மான்கான் – வம்ஷி பைடிபள்ளி புது படத்தின் ஷூட்டிங் அப்டேட் :

நடிகர் சல்மான்கானின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சிக்கந்தர். இந்த படத்தை தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் சல்மான்கானுடன் காஜல் அகர்வால் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது என்றே கூறலாம். இதையடுத்து 1 ஆண்டுக்கும் மேலாக சல்மான்கான் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்த நிலையில், தற்போது தெலுங்கு இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: யூத் பட வெற்றி.. கண்ணீர் மல்க கென்னை அரவணைத்த தாய் கிரேஸ் – வைரலாகும் வீடியோ!

இந்த படமானது பேமிலி, ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக தயாராகவுள்ளதாம். இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக தமிழ் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இதன் ஷூட்டிங் வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us