AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லீடர் பட விழாவில் அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்!

VTV Ganesh harshly criticized Aranthangi Nisha : லெஜெண்ட் சரவணன் நடிப்பில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் லெஜெண்ட் சரவணன். இந்தப் படத்தின் விழாவில் நடிகை அறந்தாங்கி நிஷாவை விடிவி கணேஷ் கடுமையாக விமர்சித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லீடர் பட விழாவில் அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்!
விடிவி கணேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 Mar 2026 11:58 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி அனைத்து மொழிகளிலும் தற்போது நடிப்பதற்கு வயது தேவை இல்லை என்பது போல 50 வயதைக் கடந்தவர்களும் நடிப்பதில்  ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி இருக்கையில் தமிழகத்தில் பிரபல தொழிலதிபராக இருக்கும் லெஜெண்ட் சரவணன் தனது 50 வயதுற்கு மேல் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி அவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி லெஜெண்ட் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படம் லீடர். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் எழுதி இயக்கி இருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, ஆதித்யா கதிர் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலர் கலந்துகொண்டனர்.

அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்:

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் விடிவி கணேஷ் லீடர் பட விழாவில் பேசிய போது படத்தில் நடித்த அனுபவம் மற்றும் லெஜெண்ட் சரவணன் உடனான நட்பு குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷா குறித்து பேசும் போது கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாமா என்று கடுமையாக சாடியுள்ளார். விடிவி கணேஷிற்கு முன்னதாக நடிகை அறந்தாங்கி நிஷா பேசியபோது படம் குறித்து பேசாமல் தனது கணவருடன் சுற்றித்திரிந்ததையும் நடிகர் லெஜெண்ட் சரவணன் உடன் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய விடிவி கணேஷ் கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாமா படத்தில் நடித்த அனுபவம் மற்றும் படம் தொடர்பாக பேசாமல் சொந்த கதையை பேசுகிறாரே என்று மிகவும் காட்டமாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி?

படக்குழு வெளியிட்ட லீடர் பட ட்ரெய்லர்:

Also Read… தனுஷ் 55 படத்தில் மம்முட்டின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்

Follow Us