AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நல்ல கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னு எங்களுக்காக வந்து நின்னாரு கமல் சார் – இயக்குநர் பிரபு சாலமன் எமோஷ்னல் பேச்சு

Director Prabhu Solomon talks about Kamal Haasan: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நல்ல கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னு எங்களுக்காக வந்து நின்னாரு கமல் சார் – இயக்குநர் பிரபு சாலமன் எமோஷ்னல் பேச்சு
பிரபு சாலமன் மற்றும் கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Mar 2026 21:13 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பிரபு சாலமன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சனர் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நலல் வரவேற்பைப் பெற்றது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆழமான கதைகளை மையமாக வைத்து உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பிரபு சாலமன் இயக்கத்தில் இதுவரை வெளியான கிங், மைனா, கும்கி, கயல் மற்றும் செம்பி ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் எழுதி இயக்கி கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் செம்பி.

இந்தப் படத்தில் நடிகர்கள் நிலா, கோவை சரளா, அஸ்வின் குமார் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மலைகிராமத்தை சேர்ந்த சிறுமியை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறார்கள். அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த சிறுமியின் பாட்டி கோவை சரளா எப்படி எல்லாம் போராடுகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு நடிகர் கமல் ஹாசன் எப்படி சப்போர்ட் செய்தார் என்று இயக்குநர் பிரபு சாலமன் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எங்களுக்காக வந்து நின்னாரு கமல் சார்:

இந்த படத்த பத்தி பேசுனா எனக்கு என்ன பிரயோஜனம்னு நினைக்கிறவங்க மத்தில நல்ல கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னு செம்பி பாத்துட்டு எங்களுக்காக வந்து நின்னாரு நடிகர் கமல் ஹாசன் சார், இவர் உண்மையான கலைஞன் என்று இயக்குநர் பிரபு சாலமன் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

இணையத்தில் வைரலாகும் பிரபு சாலமன் பேச்சு:

Also Read… நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி

Follow Us