AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samuthirakani: நா எதுனாலும் வெளிப்படையாக பேசுவேன்.. விஜய் பற்றி பேசிய வீடியோ – அதிரடி கருத்தை தெரிவித்த சமுத்திரக்கனி!

Samuthirakani commented About Vijay: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர் என மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமுத்திரக்கனி. இவர் டெக்ஸ்லா பட ஷட்டிங் பூஜை விழாவில், விஜய் குறித்து பேசிய வீடியோவைரலானது. தற்போது அதற்கு அதிரடி விளக்கம் கொடுத்துள்ளது. அவர் என்ன கூறினார் என விவரமாக பார்க்கலாம்.

Samuthirakani: நா எதுனாலும் வெளிப்படையாக பேசுவேன்.. விஜய் பற்றி பேசிய வீடியோ – அதிரடி கருத்தை தெரிவித்த சமுத்திரக்கனி!
சமுத்திரக்கனி மற்றும் விஜய்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Mar 2026 22:53 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, நதற்போது பிரபல நடிகராக வலம்வருபவர் சமுத்திரக்கனி (Samuthirakani). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் காந்தா (Kaantha). இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) இணையான வேடத்தில் இவர் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்த படமானது பிரம்மாண்டமாக வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு திறக்கியுள்ள படம்தான் கார்மேனி செல்வம் (Carmeni Selvam). இதில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அந்த வகையில் இது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் அண்மையில் நேர்காணல் நெய்ல் பேசிய சமுத்திரக்கனி, டெக்ஸ்லா (Texla) பட பூஜை விழாவில், விஜய் (Vijay) குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், அது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: துல்கர் என்னை எப்போதும் அப்படிதான் அழைப்பார் – ஸ்ருதிஹாசன் பகிர்ந்த விஷயம்!

விஜய் குடித்து பேசிய வீடியோ குறித்து அதிரடி கருத்தை தெரிவித்த சமுத்திரக்கனி:

அந்த நேர்காணலில் பேசிய சமுத்ரிரக்கனியிடம், தொகுப்பாளர் “நீங்கள் வீடியோ ஒன்றில் விஜய் குறித்து பேசியிருந்தீரிகள், எது வைரலாகிவந்தது. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய சமுத்திரக்கனி, “எனக்கு அந்த வீடியோ எடுக்கும்போதே தெரியும். அவர் முன்னுரை எடுக்கவில்லை, வெறும் முடிவுரை மட்டும்தான் எடுத்தாரு. நானும் அவர் வெறும் முடிவுரை மட்டுமே எடுத்திருக்கிறது-னு விட்டுட்டேன். அவர் போன் எடுத்து வீடியோ எடுக்கிறார் என்பதால் பேச்சை நிறுத்தினால் நன்றாக இருக்காது.

இதையும் படிங்க: கென் கருணாஸின் யூத் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சூர்யா மற்றும் கார்த்தி!

அதனால் பேசி முடிவுரை மட்டும் எடுத்துக்கொண்டுபோகட்டும் விட்டுட்டேன். என்னத்த செய்ய என கூறினார். மேலும் தொகுப்பாளர் அவரிடம், ஒரு நடிகராக எவ்வளவு தெளிவாக இருக்கவேண்டும்? என கேட்டார். அதற்கு சமுத்திரக்கனி, “சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறக்கவேண்டும். நான் சில விஷயங்களை அக்கறையோடுதான் பேசியிருக்கேன். நான் உள்ளே ஒன்று வைத்துவிட்டு வெளியே ஒன்று பேசுபவன் இல்லை” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.

விஜய் பற்றி சமுத்திரக்கனி பேசிய வீடியோ குறித்த பதிவு:

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா பட ஷூட்டிங் பூஜையுடன் நடிகர் விஜய் குறித்து, சமுத்திரக்கனி வெளிப்படையாக பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதத்தில் , சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது கருத்தை அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us