Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samuthirakani: ‘துல்கர் சல்மானும் நானும் அப்பா – பிள்ளை மாதிரிதான்’- எமோஷனலாக பேசிய சமுத்திரக்கனி!

Samuthirakanis Emotional Speech: தமிழ் சினிமாவில் பிரபாலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சமுத்திரக்கனி. இவர் தமிழை அடுத்ததாக பல மொழிகளிலும் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் காந்தா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய சமுத்திரக்கனி, துல்கர் சல்மான் எனது மகன் போன்றவர் என தெரிவித்துள்ளார்.

Samuthirakani: ‘துல்கர் சல்மானும் நானும் அப்பா – பிள்ளை மாதிரிதான்’- எமோஷனலாக பேசிய சமுத்திரக்கனி!
சமுத்திரக்கனி மற்றும் துல்கர் சல்மான்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Nov 2025 18:12 PM IST

நடிகர் சமுத்திரக்கனி (Samuthirakani) சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறார். இயக்குநராக சினிமாவில் நுழைந்த இவர் தற்போது, வில்லன் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் மிக பிரம்மாண்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் காந்தா (Kaantha). நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்துள்ளார். இதில் நடிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) மற்றும் ராணா போன்ற நடிகர்களும் முக்கிய வேகத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியுள்ள நிலையில், ராணா (Rana) மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் 2025 நவம்பர் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய சமுத்திரக்கனி “துல்கர் சல்மானும் , நானும் அப்பா பிள்ளை போன்றவர்கள்” என எமோஷனலாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஒருத்தருக்கா கொடுத்தான்… இல்லை ஊருக்காக கொடுத்தான் – வெளியானது கவினின் மாஸ் படத்தின் ட்ரெய்லர்

துல்கர் சல்மான் குறித்து எமோஷனலாக பேசிய சமுத்திரக்கனி :

அந்த நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் “உங்களுக்கும் துல்கர் சல்மானுக்கு இடையே எப்படி பட்ட உறவு படத்தில் நிலவுகிறது?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “ஒரு அப்பா மற்றும் பிள்ளையைப் போல எங்களின் உறவு இப்படத்தில் இருக்கும். நிஜ வாழ்க்கையிலும் துல்கர் சல்மான் எனக்கு மகன் போன்றவர்தான். உண்மையிலே அவரை எனது பிள்ளையாகத்தான் பார்க்கிறேன்” என அவர் அதில் எமோஷனலாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இந்த விஷயத்தை கூறிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிய சமுத்திரக்கனி துல்கர் சல்மானை கட்டியணைத்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மான் குறித்து சமுத்திரக்கனி பேசிய வீடியோ பதிவு :

மேலும் இந்த காந்தா படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும், இப்படத்தைப் பார்த்தபிறகு, துல்கர் சல்மானை ஓடி சென்று கட்டிபிடிக்கவேண்டும் என்று இருந்ததாகவும் சமுத்திரக்கனி அந்த நிகழ்ச்சி மேடையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.