Varalaxmi Sarathkumar: ஷங்கர் சாரின் அந்த படத்தில் முதல் சாய்ஸ் நான் தான்- வரலட்சுமி சரத்குமார் சொன்ன விஷயம்!
Varalaxmi Sarathkumar About Shankar: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். இவரின் நடிப்பில் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் முக்கிய வேடங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்த காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
பிரபல நடிகரின் மக்களும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் (Varalakshmi Sarathkumar) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். மேலும் தற்போது இவர் ஹாலிவுட் சினிமாவிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சினிமாவில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்திருந்தது போடா போடி (Poda Podi). இயக்குநர் விக்னேஷ் சிவனின் (Vignesh Shivan) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிலம்பரசன் (Silambarasan) ஹீரோவாக நடித்திருந்தார். இதன் மூலமாகத்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் வெற்றியை தொடர்ந்து, இவருக்கு தமிழில் படங்கள் வர தொடங்கியது. மேலும் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் வில்லன் வேடங்களிலும் இவர் நடித்து அசத்திவருகிறார்.
அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீனிக்ஸ் (Phoenix). இதில் விஜய் சேதுபதியின் மகன் ஹீரோவாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ‘தங்கமே தளபதி.. பிளாஸ்ட்டு’.. பிளாஸ்ட்டு… ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது!
எஸ். சங்கரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து வரலட்சுமி சரத்குமார் பேச்சு :
அந்த நேர்காணலில் வரலட்சுமி சரத்குமாரிடம் தொகுப்பாளர், “நீங்கள் ஷங்கர் சாரின் பாய்ஸ் படத்தை தவறவிட்டீர்களாமே?” என கேள்வி கேட்டார். அதற்கு வரலட்சுமி சரத்குமார், “அந்த படத்தில் நடிப்பதற்கு அப்பா விடவில்லை. அந்த படத்தில் நான் நடிப்பதற்கு எல்லா விஷயங்களும் ஓகே ஆகிடுச்சு. ஆனால் அப்பா தான் விடவில்லை. ஜெனிலியாவின் கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிக்கவிருந்தேன்.
இதையும் படிங்க: நயன்தாரா எனக்கு போட்டியா? அனைவருக்கு அதை சொல்ல காரணம் இதுதான்- திரிஷா கிருஷ்ணன்!
ஷங்கர் சாரின் முதல் சாய்ஸ் நான் தான். அந்த கதாபாத்திரத்திற்காக ஆடிசன் பண்ணி, மேனேஜர்கள் முதல் அனைவருக்கும் நான் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என கூறினார்கள். எல்லாருக்குமே இந்த கதாபாத்திரம் நான் நடித்தது பிடித்திருந்தது. மேலும் காதல் படத்திலும் நான்தான் நடிக்கவேண்டியது அப்பா விடவில்லை, வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் நான் தான் நடிக்கவேண்டியது அப்பா விடவில்லை” என அவர் நடிக மறுத்த திரைப்படங்கள் குறித்து அவர் ஓபனாக பேசியிருந்தார்.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது நடிகையாக இருந்து, மேலும் இயக்குநராகவும் படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.