Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith kumar: நான் நிஜத்தில் இப்படித்தான்.. எனக்கு முன் கோபம் ஜாஸ்தி – அஜித் குமார் பகிர்ந்த விஷயம்!

Ajith Kumar About His True Personality: இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில், தனது நிஜ குணங்கள் குறித்தும், தனக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும் என்பது குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Ajith kumar: நான் நிஜத்தில் இப்படித்தான்.. எனக்கு முன் கோபம் ஜாஸ்தி – அஜித் குமார் பகிர்ந்த விஷயம்!
அஜித் குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 Nov 2025 08:30 AM IST

தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக நடிக்க தொடங்கியவர் அஜித் குமார் (Ajith Kumar). பின் தமிழ் சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமானார். அப்படி இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படமாக அமைந்திருந்தது அமராவதி (Amaravathi). கடந்த 1993ம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். அதற்கு முன் 1990ல் என் வீடு என் கனவு (En Veedu En Kanavu)என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவந்தார் அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த மொழிகளிலும் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good bad Ugly). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படம் வெளியாகி சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அஜித் குமார் சினிமாவைத் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளிலும் தீவிரமாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் முன்பு ஒரு நேர்காணலில் தனது நிஜ குணங்கள் குறித்து ஓபனாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நடிகை நதியாவின் இளமை ரகசியம் இதுவா? அவரே சொன்ன சீக்ரட் விஷயம்!

தனது குணங்கள் குறித்து ஓபனாக பேசிய அஜித் குமார் :

முன்னதாக பேசியிருந்த நேர்காணலில் நடிகர் அஜித் குமார், சினிமா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அவர், அவரின் குணம் குறித்து ஓபனாக தெரிவித்தார். அதில், “நான் எப்போதுமே இப்படித்தான், எனக்கு பயங்கரமாக முன் கோபம் வரும். முன் கோபம் எனக்கு மிகவும் ஜாஸ்தி. எனக்கு சில விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றால் அதை அனைவரின் முன்னைலையிலும் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். எனக்கு இந்த விஷயத்தில் இஷ்டமில்லை என்று ஓபனாக சொல்லிவிடுவேன்.

இதையும் படிங்க : எனது மகன்களும் அதை செய்யவேண்டும்.. அதுதான் எனக்கு பெருமை – தனுஷ் சொன்ன விஷயம்!

மற்றவர்களை போல சுற்றிவளைத்து பேசுவது எனக்கு பிடிக்காதது. எனது மனதில் எதாவது தோன்றியது என்றால் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். எதையும் மறக்கமாட்டேன். எனது என்னது எது வருகிறதோ அதை அவர்களின் முன்னிலையில் உடைத்துவிடுவேன்” என அதில அவர் ஓபனாக பேசியிருந்தார்.

அஜித் குமாரின் ரீசென்ட் போட்டோஷூட் தொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு :

நடிகர் அஜித் குமார் தற்போது ரேஸில் மும்முரமாக இருந்துவருகிறார். இவர் நடிக்கவுள்ள AK64 படத்தின் அறிவிப்புகள் 2026ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகவும் நிலையில், அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதி தொடர்ந்து 2026ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என் ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.